India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான இலம்பி தோல் நோய் (பெரியம்மை நோய்) தடுப்பூசி சிறப்பு முகாம் ஆக.5 முதல் ஆக.31 வரை நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் தேனி மாவட்டம் முழுவதும் கால்நடை வளர்ப்போர் பசு மற்றும் எருமை மாடுகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களை கண்காணிக்கவும் , மழை நேரங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ரூ. 1 லட்சம் செலவில் 25,000 பனை விதைகள், 277 பனை கன்றுகள் வழங்க திட்டமிட்டுள்ளது. ஒருவருக்கு அதிகபட்சம் 50 விதைகள் வழங்கப்படும். தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி மன்றம், மகளிர் குழுக்களுக்கு அதிகபட்சமாக 100 பனை விதைகள் வழங்கப்படும். தேவைப்படுவோர் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தோட்டக்கலைத் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கரையான்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன்(50). இவரை லட்சுமி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போடி தாலுகா போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலை கடக்கும்போது ஏற்பட்ட பிரச்சனையில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் இந்தாண்டு 2500 விவசாயிகளுக்கு விதைத்தொகுப்பு வழங்க பணிகள் நடந்து வருகிறது. ஒரு தொகுப்பு ரூ.40க்கு வழங்கப்பட உள்ளது. இதில் புடலை, பூசணி, முருங்கை, ஒரு கீரை வகை, தக்காளி, கத்தரி, வெண்டி, பீர்க்கங்காய் விதைகள் கொண்ட தொகுப்பு இருக்கும். விதைகள் பெறுவதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள உதவி தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த மனோகரன், இவரது வீட்டில் ஜூலை 16ஆம் தேதி இரவு நகை மற்றும் பணம் திருடு போனதாக பெரியகுளம் தென்கரை போலீசில் புகாரளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட மூர்த்தி மற்றும் அம்சராஜன் இருவரையும் காவல்துறையினர் இன்று கைது செய்து அவர்களிடம் இருந்து 48 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை அளித்து தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து கம்பத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பாரத ஸ்டேட் வங்கி கிளையை முற்றுகையிட முயன்றனர். இதனை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினருடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஊர்வலம் செல்ல முயன்ற போது காவலர்களுக்கும் கட்சிக்காரர்களும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், விண்ணப்பித்து வைப்புத் தொகை ரசீது பெற்ற பயனாளிகள், முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் மற்றும் மாஸ்டர் கிக் பாக்ஸிங் போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, நவீன் குமார், ஸ்ரீ சபரீஷ் ஆகிய மூன்று பேர் பங்கேற்றனர். இதில் மாரிமுத்து -71 Kg எடை பிரிவில் வெண்கலப் பதக்கமும், நவீன் குமார் – 63 kg எடைபிரிவில் வெண்கலப்பதக்கமும், சபரீஷ் பாயிண்ட் ஃபைட் -57 Kg எடை பிரிவில் ஐந்தாமிடத்தையும் பெற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், நேற்று வினாடிக்கு 5,339 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 3,265 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.15 அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1355 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 4,966 மில்லியன் கன அடியாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.