Theni

News August 5, 2024

பிளஸ் – 1 மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு

image

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என இளநிலை பட்டப்படிப்பு வரை வழக்கப்படும். இதற்காக நேற்று தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 1,283 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 188 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News August 4, 2024

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த நிர்வாகிகள்

image

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளும் அவருக்கு மரியாதை செய்தனர்.

News August 4, 2024

தேனி மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடையிடையே 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

தேனி மாவட்டத்தில் இன்று மழை பெய்யக்கூடும்

image

தமிழகத்தில் இன்று (ஆக.04) இரவு 7 மணி வரை 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

தேனி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 5.30 மணி வரை 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

நட்புன்னா என்னன்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, தேனியில் உள்ள 4,25,919 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.

News August 3, 2024

தேனியில் காட்டு யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு

image

தேனி மாவட்டம் தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காட்டு யானை மிதித்ததில் தொழிலாளி ரெங்கசாமி உயிரிழந்தார். இவர் கழுதை மூலமாக கேரளாவுக்கு பொருட்களை கொண்டு சென்றபோது காட்டு யானை மிதித்து உயிரிழந்ததாக தெரிகிறது. அவரது உடலை மீட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 3, 2024

பெரியகுளத்தில் 837 டன் நெல் கொள்முதல்

image

தேனி மாவட்டத்தில் நெல் அறுவடையை முன்னிட்டு பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்மங்கலத்தில் 2, கீழ வடகரையில் ஒரு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் 32 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 1 மாதத்தில் 3 கொள்முதல் நிலையங்களிலும் சேர்த்து 837 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

News August 3, 2024

தபால் நிலையங்கள் மூலம் புனித கங்கை நீர் விற்பனை

image

நாளை (ஆக.4) ஆடி அமாவாசையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் உள்ளிட்ட இடங்களில் தபால் துறை மூலம் சிறப்பு ஸ்டால்கள் திறக்கப்பட்டு புனித கங்கை நீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. பொது மக்கள் இச்சேவையை பயன்படுத்தி பயன்பெறலாம் என கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!