Theni

News August 9, 2024

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் முதியவர் கைது

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சுந்தரராஜபுரத்தை சேர்ந்த குருவையா(55) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வந்த நிலையில், போலீசார் நேற்று முன்தினம்(ஆக.07) குருவையாவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 9, 2024

விளையாட்டு போட்டி – விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கடந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்பட்டும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

துவரை சாகுபடி – தேனி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு 715 ஹெக்டேர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கூடுதலாக 1250 ஏக்கர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2500 வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் என தேனி மாவட்ட வேளாண் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

தேனி மாவட்டத்திற்கு மழை

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 8, 2024

250 கிராமங்களுக்கான குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் தொடக்கம்

image

தேனி மாவட்டத்தில் 250 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து புதிய குடிநீர் திட்டம் ரூ.162 கோடி மதிப்பில் 2020ம் ஆண்டு தொடங்கியது. சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு மயிலாடும்பாறை, தேனி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது திட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் தொடங்கியது என தகவல் அளித்துள்ளனர்.

News August 8, 2024

ரூ.3.65 கோடியில் கட்டப்படும் புதிய வணிக வளாக கட்டடப் பணி

image

சின்னமனூரில் 50 ஆண்டுகளுக்கு முன் 54 கடைகளுடன் கட்டப்பட்ட வணிக வளாகம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. கடந்த மாதம் சேதமடைந்த 54 கடைகளும் பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து அகற்றப்பட்டன. தற்போது, அந்த இடத்தில் ரூ.3.65 கோடியில் புதிய வணிக வளாகப் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரை, முதல் தளம் என மொத்தம் 74 கடைகள் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

News August 8, 2024

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1.37 கோடி மோசடி

image

தேனி வண்டியூரைச் சேர்ந்த பிரகாஷ், ஆண்டிப்பட்டியை சேர்ந்த பாலமுருகன், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகேந்திரகுமார் ஆகியோர் சேர்ந்து 21 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.1.37 கோடி மோசடி செய்தது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, நேற்று பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

News August 7, 2024

மக்களுடன் முதல்வர் முகாமில் உடனடி நிவாரணம்

image

தேனி மாவட்டம் ஜங்கால்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் நேரடியாக வந்து மனு செய்த உடனேயே தயாரான பட்டா மாறுதல் ஆணையை பயனாளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார். உடன் தேனி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் உள்ளனர். இம்முகாமில் திருவிழா கூட்டம் போல் பொதுமக்கள் திரளாக வந்திருந்து பயன்பெற்றனர்.

News August 7, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.7) தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 7, 2024

நியூட்ரினோ திட்ட வழக்கு ஒத்திவைப்பு

image

தேனி, பொட்டியாபுரத்தில் நியூட்ரினோ திட்டத்துக்காக 1000 மீட்டரில் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதனால் தேனியில் நில வளம், விவசாயம், வன விலங்குகள், மேற்குதொடர்ச்சி மலையின் பசுமை தொடர்களுக்கு பேரழி ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைபாடு என்ன? என கேள்வி எழுப்பியதோடு வழக்கை ஆக.13 ஒத்திவைத்தார்.

error: Content is protected !!