Theni

News January 20, 2025

தேனி மாவட்டத்தில் மழை நிலவரம் 

image

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (ஜன 20) ஆண்டிப்பட்டி 9.2 மி.மீ, அரண்மனைப்புதூர் 10 மி.மீ, வீரபாண்டி 8.4 மி.மீ, பெரியகுளம் 20 மி.மீ, மஞ்சளாறு 7.4 மி.மீ, சோத்துப்பாறை 24 மி.மீ, வைகை அணை 5.8 மி.மீ, போடிநாயக்கனூர் 9.6 மி.மீ, உத்தமபாளையம் 6.8 மி.மீ, கூடலூர் 6.6 மி.மீ, பெரியாறு அணை 13.2 மி.மீ, தேக்கடி 17.8 மி.மீ, சண்முகா நதி 15.6 மி.மீ. சராசரி மழை அளவு =11.87 மி.மீ

News January 20, 2025

மனநல சிகிச்சையில் இருந்தவர் தற்கொலை

image

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (41). இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாட்களாக மருந்து மாத்திரை சாப்பிடாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜன.19) வெளியே சென்றவர் அப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு.

News January 19, 2025

தேனி மாவட்ட கலெக்டர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

image

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஒரு பாதுகாப்பு அலுவலர் மற்றும் 2 சமூக பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த பல்துறை வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்

News January 19, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 19.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 19, 2025

தேனியில் இருந்து சென்னைக்கு இன்று கூடுதல் பஸ்கள் இயக்கம்

image

தேனியிலிருந்து சென்னை செல்ல அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் இன்று (ஜன.19) கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணிக்க இருக்கை வசதி, சாயும் இருக்கை வசதி, படுக்கை வசதி, ஏ.சி., வசதி கொண்ட அரசு பஸ்களில் பயணிக்க www.tnstc.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பஸ் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.442 முதல் அதிகபட்சம் ரூ.750 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 18.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 18, 2025

தொழில் முனைவோராக விண்ணப்பிக்கலாம்

image

முதல்வரின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தில் (CM ARISE) மொத்த மதிப்புத் தொகையில் 35 சதவீதம், அல்லது ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்., விவரங்களுக்கு 04546 – 260995 அழைக்கலாம்.

News January 18, 2025

ரூ.74.75 லட்சம் மோசடி இருவர் கைது

image

ஆண்டிபட்டியை சேர்ந்த சுந்தா் என்பவரிடம் ரேவதி, இவரது மகள் பூமிகா, வீரன், வெற்றிவேல் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய 5 பேர் சேர்ந்து 125 பவுன் தங்க நகைகள் செய்து தருவதாகக் கூறி ரூ.74.75 லட்சம் பெற்றுக்கொண்டு நகைகள் செய்து தராமல் மோசடி செய்தனர். இதுகுறித்து 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று (ஜன.17) ரேவதி, வீரன் ஆகிய இருவரையும் கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

News January 17, 2025

மாநாடு செல்லும் பேருந்தினை துவக்கி வைத்த எம்பி

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை 3வது மாநில மாநாடு (ஜன.18) நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்காக தேனி மாவட்ட சட்டத்துறை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செல்லும் பேருந்தினை இன்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, தேனி வடக்கு திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 17, 2025

போடியில் அமமுகவில் இணைந்த இளைஞர்கள்

image

போடியில் அமமுகவின் போடி நகர் செயலாளர் SVS ஞானவேல் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதிதாக தங்களை அமமுக கட்சியில் இணைத்துக் கொண்டனர். உடன் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், போடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பேச்சாளர் Aபோத்திராஜ் மற்றும் நகர நிர்வாகிகள், சார்பணி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!