Theni

News August 21, 2024

தேனியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று(ஆக.,21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

News August 20, 2024

பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள வராக நதி, வைகை நதி, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி ஆறு போன்ற ஆறுகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் ஆற்றுப்பகுதியில் குளிக்கும் போதும், துணி துவைக்கும் போதும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

News August 20, 2024

வீடு, வீடாக வாக்காளர்கள் ஆய்வு

image

தேனி மாவட்டத்தில் 2025 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், பெயர் நீக்கல், ஓட்டுச்சாவடி மையங்கள் பிரித்தல், இடமாற்றம், பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் இன்று முதல் அக்.18 வரை நடைபெற உள்ளது. இதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News August 20, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஆக.25 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 20, 2024

தபால் துறை பணியிடங்களுக்கான உத்தேசப் பட்டியல்

image

தேனி தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. தேனி தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 65 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்.<<>>

News August 20, 2024

தேனியில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்ட முகாம்

image

தேனி மாவட்டம் தேனி வட்டத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 9 மணி முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 9 மணி வரை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் அப்பகுதியில் தங்கி அரசின் சேவைகள் திட்டங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News August 20, 2024

தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

image

சைபர் க்ரைம் குற்றவாளிகள் ஆன்லைன் செயலின் முலம் லிங்க் அனுப்பி அதிக சம்பளத்துடன் பகுதி நேர வேலை வாய்ப்பு, அப்ளை செய்ய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் என்று வரும் குறுஞ்செய்தி லிங்கினை கிளிக் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (ஆக.19) தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News August 19, 2024

தேனி மாவட்டத்தில் தேசிய குடல்புழு நீக்கல் சிறப்பு முகாம்

image

தேனி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு தேசிய குடல்புழு நீக்கல் நாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி சுகாதார நிலையம் அங்கன்வாடி மையம் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ஷஜீவனா தகவல் தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

தேனியில் சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்

image

தேனி அருகே சாலை இல்லாததால் டோலியால் தூக்கி சென்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். சின்னூர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவரை சுமார் 5 கிலோ மீட்டர் வரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் டோலி கட்டி சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 19, 2024

தேனியில் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

image

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், சீலையம்பட்டி கம்பர் பள்ளித் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் திருமாறன் (19) ஆசைவார்த்தை கூறி, வெளியூர் அழைத்து சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோர் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சின்னமனூர் அருகேயுள்ள கூளையனூரில் தங்கியிருந்த சிறுமியை மீட்டனர்.

error: Content is protected !!