India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசால் பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்கும் விதமாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் 530, உதவி பெறும் பள்ளிகள் 216-ல் பள்ளி அளவிலான போட்டிகள் இன்று முதல் ஆக.30 வரை நடைபெறவுள்ளன. முதல் 3 இடங்களை வென்ற மாணவர்களின் பெயர்களை செப்.,3க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் போக பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் பாசனத்திற்கான தண்ணீர் 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் குடிநீருக்காக 69 கன அடி தண்ணீர் என மொத்தம் 869 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
தேனி தேவதானப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது வீட்டின் காலியிடத்தில் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் அப்துல்லா, எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்து கஞ்சா செடியை அகற்றினர். மாரியப்பனை போலீசார் கைது செய்த நிலையில் வீட்டு சுவர் ஏறி தப்ப முயன்ற அவரது மகன் பால்பாண்டி கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் எரசக்கநாயக்கனூர் ஶ்ரீ பராசக்தி அம்மன் கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதற்கான அழைப்புகளை கோவில் நிர்வாகிகள் பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினர்.
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி தேனி,திண்டுக்கல்,திருப்பூர்,கோவை,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
தேனி, சின்னமனூர் ஒன்றியம், மார்க்கையன்கோட்டை அய்யப்பன் கோவில் திடலில், வரும் செப்.,5 ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வ. உ. சி இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில் 2-ம் ஆண்டு குறு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. போட்டியின் முதல் சுற்று 16 வயது முதல் 23வயது வரை, 2ம் சுற்று 10வயது முதல் 15வயது வரை நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
கம்பம் போலீசார் நேற்று (ஆக.25) கம்பம்மெட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வழியாக வந்த டூவீலர் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரூ. சுமார் 2.2 லட்சம் மதிப்புள்ள 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் டூவீலரையும் பறிமுதல் செய்து படித்துரை, பரமன், கண்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் கேரளாவில் உள்ள தனது குழந்தைகளை பார்த்துஆக.24.ல் ஊர் திரும்புவதற்காக தனியார் ஜீப்பில் போடிக்கு வந்துள்ளார். இரவு நேரமானதால் அன்றிரவு ஜீப்பிலேயே தங்க சொல்லிவிட்டு ஜீப் ஓட்டுநர் அவரது வீட்டிற்கு சென்றார். ஓட்டுநர் நேற்று (ஆக.25) மீண்டும் வந்தபோது ஜீப்பில் தூங்கிய நிலையில் அழகர்சாமி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போடி போலீசார் விசாரணை செய்கின்றனர்.
தேனி டி,சிந்திலைச்சேரி பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ். இவரிடம் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டவர் உங்களுக்கு ரூ.12.80 லட்சம் மதிப்பில் பரிசு விழுந்துள்ளது என்றுள்ளார். அதை நம்பி ரூ.17.69 லட்சம் வரை 11 வங்கி கணக்களுக்கு அனுப்பினார். ஆனால் கார் தராமல் ஏமாற்றியதால் சந்தேகமடைந்தவர் தேனி சைபர் கிரைம்ல் புகாரளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் போலி கால்சென்டர் உரிமையாளர் ரோகித் குமாரை போலீசார் கைது செய்தனர்.
தேனி ஜங்கால்பட்டியை சேர்ந்த அபிமன்னன், ராஜாமணி தம்பதியினர். இவர்கள் தனது மகன் அஜித்குமாருடன் வசித்து வருகின்றனர். போதைப்பழக்கத்திற்கு அடிமையான அவர் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்தார். இந்நிலையில் நேற்று (ஆக.24) பணம் கேட்டு நடந்த தகராறில் பெற்றோரை தாக்கினார். கோபமடைந்த பெற்றோர் மகனை மீண்டும் தாக்கியதில் சம்பவ இடத்திலே அஜித்குமார் பலியானார். வீரபாண்டி போலீசார் பெற்றோரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.