India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போடி அருகேயுள்ள கோணாம்பட்டியைச் சேர்ந்தவா் சுப்புலட்சுமி. இவா் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். போலீசார் நடத்திய விசாரணையில் நகைக்காக நடராஜன் என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த நிலையில் வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பாக நேற்று (மார்.20) நடராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கிடையே வெறுப்பையும் துவேஷத்தையும் தூண்டுகிற குறிப்புகள் இடம் பெற கூடாது. கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மற்ற கட்சியினரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, பொது நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத விவரங்கள் பற்றியோ ஆட்சேபனையான விவரங்கள் இடம் பெற கூடாது. மீறினால் தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவிப்பு.
சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய செய்திகளை பிரச்சாரங்களாக மேற்கொண்டால் அல்லது அவர்களது அலைபேசிக்கு ஆட்சேபனையான குறுங்செய்தி/பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் வந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் 93638 73078 (வாட்ஸ்ஆப்) 04546-261730 (தொலைபேசி) ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புதிதாக துணை கண்காணிப்பாராக சூரக்குமரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பெரியகுளம், தென்கரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போடு காவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 14,219 பேர், 40 சதவீதத்திற்கும் மேல் உடல் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் 11,096 பேர் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் மக்களவை தோ்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு உரிய படிவத்தை பூர்த்தி செய்து மாா்ச் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக – அமமுக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக – அமமுக மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேனி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச்.20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார் . அதன்படி தேனி தொகுதியில் வேட்பாளராக நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Sorry, no posts matched your criteria.