India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே வயல்பட்டி கிராமத்தில் செப்டம்பர் 11 அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனுக்கள் வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று ஒடிசாவில் கரையை கடக்கிறது. இதனால், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி இரவு 7 மணிக்குள் தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கை கூறுகிறது .
தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சட்டவிரோதமாக ஒன்று கூடி, முன் அறிவிப்பு மற்றும் போலீசார் அனுமதியின்றி 3 அடி விநாயகர் சிலையை வாகனத்தில் ஏற்றி முல்லையாற்றில் கரைப்பதற்காக ரோட்டை மறித்து பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக விஏஓ அளித்த புகாரின் அடிப்படையில் கட்சியின் மாநில துணைத் தலைவர் குரு ஐயப்பன் உள்ளிட்ட 28 பேர் மீது போலீசார் நேற்று (செப்.8) வழக்கு பதிவு செய்தனர்.
மறவபட்டி கிராமத்திலிருந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு மார்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றில் கரைத்து விட்டு கிராமத்தை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது லட்சுமி நாயக்கன்பட்டி சிந்தலை சேரி அருகே டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் இருந்த கிஷோர், ஹரிஷ், விஷால் ஆகிய 3 பள்ளி சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தேனி, பெரியகுளம் கீழ வடகரை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வருடம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். சிறுமியை பார்க்க சென்ற தந்தை சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கேட்ட நிலையில், இருவரையும் அவர் தாக்கியுள்ளார். சிறுமி அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் அப்துல் நபி மீது நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று (செப்.8) தேனி மாவட்டத்திற்கு மட்டும் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம் என்றும், போக்குவரத்து பாதிக்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய நகரங்களில் இன்றும் (செப்.8), நாளையும் விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி,இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கம்பத்தில் இந்து முன்னணி சார்பில் 63 சிலைகளும்,இந்து எழுச்சி முன்னணி சார்பில் 17 சிலைகளும் ஊர்வலமாக சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்க உள்ளனர்.உத்தமபாளையத்தில் 26 சிலைகளும் கரைக்கப்படுகிறது.
தேனி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை-2024 விளையாட்டு போட்டிகள் வரும் செப்.10ஆம் தேதி முதல் செப்.24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைப்பேசி எண்: 04546-253090 என்ற எண்ணிலோ வேலை நேரங்களில் தொடர்பு கொண்டு, கேட்டறிந்து கொள்ளலாம். விருப்பமுள்ளோர்கள் பள்ளி/கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 ஐஏஏஸ் அதிகாரிகளை துணை மற்றும் உதவி ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் பெரியகுளம் துணை மாவட்ட ஆட்சியராக ராஜட் பீட்டான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரியகுளம் கோட்டத்திற்குட்பட்ட நிர்வாக பணிகளை இனி இவர் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி முத்துத்தேவன்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி. இவர் கணவர் செல்வம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இந்நிலையில் மலர்கொடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக அவருக்கு வலி அதிகரித்தது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று (செப்.6) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.