India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், கால நிலை மாற்றத்துறை சாா்பில் வழங்கப்படும் மஞ்சள் பை விருது பெறுவதற்கு தகுதியுள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தேனி அல்லது மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேனி என்ற முகவரியில் மே 1ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தகவல்.

பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் முல்லைப்பெரியாறு செல்லும் ரோடு, சுற்றியுள்ள இடங்களில் பறிமுதல் டூவீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய கார் ஒன்று நேற்று முன்தினம் (பிப்.15) திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைத்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தேனி மாவட்டத்தில் நெல் அறுவடை மற்றும் வைக்கோல் கூட்டும்,கட்டும் கருவிகள் தேவைக்கு விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்துகொள்ளுமாறு தேனி மாவட்ட வேளாண்.பொறியியல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு,பெரியகுளம்,தேனி,போடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அனைத்து வேலை நாட்களிலும் ஆதார் சேவை மையம் செயல்படும் என தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார். அதில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு உள்ளிட்டவைகளை பெரியகுளம், போடி உள்ளிட்ட தலைமை அஞ்சலகங்களிலும் தேனி துணை அஞ்சலகங்களிலும் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

கா்நாடக மாநிலத்தை சோ்ந்த கோபால நாயக் உள்ளிட்ட 5 பேர் மாலை அணிந்து ஆம்னி வேனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு நேற்று (பிப்.15) மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். உத்தமபாளையம் அருகே வந்த போது வேனில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து வேனை நிறுத்திய ஓட்டுநர் அனைவரையும் கீழே இறங்கிவிட்டார். வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பலருக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். வெயிலில் அலையக்கூடாது. தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். எந்த வகையான அம்மை என்பதை கண்டறிந்து டாக்டர்களின் ஆலோசனைப்படி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

தேனி மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் 9 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 9 வட்டாரத்திலும் தலா 100 கர்ப்பிணி பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகத்திலிருந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் மற்றும் இராஜதானி அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 3.11 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டடத்தினை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வலைதளத்திலும் (https://theni.nic.in), தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வலைதளத்திலும் (tnpcb.gov.in) தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தேனி மாவட்டத்தில் மட்டும் 25 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச்.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். லிங்க் *ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.