India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி டவுனில் பணிபுரிந்து வந்த ஏ.எஸ்.பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா, தேனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், தேனி டிஎஸ்பி-ஆக பணிபுரிந்து வந்த பார்த்திபன் சென்னைக்கு பணியிட மாறுதல் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று (செப்.13) தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏஎஸ்பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பாக கேரள அரசு பேருந்து இன்று முதல் ஆழப்புலாவிற்கு இயக்கப்படுகிறது. தேனி புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்ட பேருந்து கம்பம், கட்டப்பனை, வாகமண், ஈராட்டு பேட்டை, பாலா, கோட்டயம் வழியாக காலை 11.15 மணிக்கு ஆழப்புலா சென்றடையும். மறு மார்க்கத்தில் ஆழப்புலாவில் பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு தேனி வந்தடையும்.
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). இவர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் இவரது மனைவி சுதா (39) மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இந்நிலையில் நேற்று சுதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் செப்.17 அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் பார்களில் மது விற்பனை மேற்கொள்ளக் கூடாது என ஆணையிடப்பட்டுள்ளது. மேற்காணும் நாளில் விதிமீறல்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகள், உரிமதாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரம் இயக்கத்தின் மூலம் 33615 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1990.33 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு பல்வேறு வகையில் தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பயன் பெற்ற பயனாளிகள் தமிழக முதலமைச்சர் மற்றும் தேனி மாவட்ட தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் இத்ரீஸ். இவர் 11 படிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்த நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தனிமையில் இருந்துள்ளார். பிறகு மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே, ஸ்கேன் செய்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பிறகு தேனி அனைத்து மகளிர் போலீசார் இத்ரீஸ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இத்ரீஸை போலீசார் தேடி வருகின்றனர்.
கண்டமனூர் அருகே மரிக்குண்டு கிராமத்திற்கு தெற்கு பகுதியில் உள்ள 60 அடி விவசாய கிணற்றில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண் ரத்தக்காயங்களுடன் இறந்த நிலையில் மிதப்பதாக கண்டமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தற்போது சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, தீயணைப்பு துறையினருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சாம்நிஜந்தன் (27). இவரது சகோதரியின் கணவர் ஆனந்தராஜும் (48) தனித்தனி பைக்கில் நேற்று அதிகாலை உத்தமபாளையம் சென்றனர். அப்போது சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் சாம்நிஜந்தன் ஓட்டிவந்த பைக் மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். இதையறிந்த ஆனந்தராஜ் விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த உயர்மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் உணவுப்பொருள் வளங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் செப்டம்பர் 14 அன்று நடைபெற உள்ளது. இதில் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் நியாயவிலை கடை, தேனி கொடுவிலார்பட்டி நியாய விலை கடை, ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் கிராம சாவடி, போடி அருகே உப்புக்கோட்டை நியாய விலை கடை, உத்தமபாளையம் அருகே அணைப்பட்டி நியாய விலை கடையில் இம்முகாம் நடைபெற உள்ளது.
வீரபாண்டி அருகே வயல்பட்டி கிராமத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகள் சார்பாக 151 பயனாளிகளுக்கு ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவியை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.