India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் நேற்று (ஏப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வடுகபட்டி பகவதி அம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டிருந்த ராஜ்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதிபுரம் பேரூராட்சி ஆதிபட்டி பகுதியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று (ஏப்.1) நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இன்று (01.04.2024) தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் முறை பாசனத்தின் படி திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக ஒருபோக பாசன நிலங்களுக்கு நிறுத்தப்பட்ட தண்ணீர் இன்று 1,130 கன அடி தண்ணீர் பாசனத்திற்கும், 72 கனஅடி தண்ணீர் குடிநீருக்கும் மொத்தம் 1,202 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவிக்னேஷ். இவர் தேனி எஸ்.பி இடம் தனது தங்கை மற்றும் அவரது உறவினர்கள் 8 பேரிடம் பள்ளிக் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கனகதுா்கா, சூா்யா, சரண்யா ஆகியோர் மொத்தம் ரூ.1,11,21,000 பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் நேற்று (மார்.31) போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் அவரது மனைவி அனுராதா நேற்று (மார்.31) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தான் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. தனது கணவருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். தங்க தமிழ்ச்செல்வனை தனது சகோதரனாக பார்க்கிறேன் என அவர் தெரிவித்தார்.
கம்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்.29) நந்தினி வீட்டுக்கு சதீஸ்குமார் சென்ற போது பிரபாகரன் என்பவருடன் நந்தினி இருந்துள்ளார். இதுகுறித்து வாக்குவாதம் ஏற்படவே இருவரும் சதீஷ்குமாரை குத்தியதில் அவர் உயிரிழந்தார். கொலை செய்த இருவரையும் போலீசார் நேற்று (மார்30) கைது செய்தனர்.
6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024 அன்றும், 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை தள்ளிப்போவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேனி மக்களவை தொகுதியில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, இன்று வேட்பு மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாளாகும். அதன்படி இன்று சுயேச்சை வேட்பாளர்கள் நான்கு பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். மீதமுள்ள 25 பேர் தேனி தொகுதியில் போட்டியிடுவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு கிளை நூலகத்தில் வாசகர் வட்டாரத்தின் சார்பாக நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை இன்று கல்வி சுற்றுலாவாக மதுரை மாவட்டம் கீழவடி அகழாய்வு மையத்திற்கு, அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வில் வாசகர் வட்டார தலைவர் அன்புக்கரசன், மணி கார்த்திக் மற்றும் நூலகர்கள் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.