India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் இன்று (பிப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தத் கோயிலில் தனி சன்னதியில் வாராஹி அம்மன் உள்ளார்.பிறருக்கு கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹி அம்மனும் பைரவர் மூர்த்தியும் உள்ள இந்த கோவிலில் வழிபட்டால் குடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம் .

உத்தமபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சுருளிவேல் (44). இவரது வீட்டிற்கு விளையாட சென்ற 6 வயது சிறுமியிடம் சுருளிவேல் அத்துமீறினார். இது குறித்த புகாரில் போலீசார் அவரை கைது செய்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக சுருளிவேலுக்கு 25 ஆண்டுகள் சிறை, ரூ.40,000 அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வி.ஏ.ஓ. உள்ளிட்ட பணிகளுக்கு குரூப்-4 எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. ஆதரவற்ற விதவை பதிவுதாரர்கள் பங்கேற்கும் போட்டி தேர்வு வருகிற 4-ம் தேதி காலை 10 மணியில் மாலை 5 மணி வரை விழிப்புணர்வு முகாம் நடக்கிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு, தனியார் நிலங்களில் பல்வேறு குவாரிகள் செயல்படுகின்றன. குவாரிகள் இதுவரை நேரடி ஏலம் மூலம் விடப்பட்டு வந்தது. இந்நிலையில் முதன் முறையாக மின்னணு முறையில் ஆண்டிபட்டி தாலுகா சண்முகசுந்தரபுரத்தில் 2, போடி தாலுகா கோடாங்கிபட்டியில் 1 என மொத்தம் 3 குவாரிகள் ஏலம் விடப்பட்டன. இந்த மூன்று குவாரிகள் ரூ.13.99 கோடிக்கு ஏலம் போனதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நாளை 28.02.2025 இலவச மிஷன் எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலுக்கு 9500314193, 9043651202, 04546251578 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

ஆண்டிபட்டி வட்டத்தினுள் நடைபெற்று வரும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை (27.02.2025) ஆண்டிபட்டி அருகே கன்னியப்பிள்ளைபட்டி ஊராட்சியில் உள்ள தேனீர் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தேனீர் அருந்தி பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நேரடியாக அவரிடம் எடுத்துரைத்தனர். இதில் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற உள்ள தேர்வுக்கு மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற விதவைகள் பயன்பெறும் வகையில் மார்ச்.4 அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பாடக் குறிப்புகள் வழங்கப்பட உள்ளன. பங்கேற்க விரும்பும் ஆதரவற்ற விதவை பெண்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 63792 68661 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர்

யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயதில் இருக்க வேண்டும். மாதம் ரூ. 15000 வழங்கப்படும். விரும்புவோர் மார்ச் 5ஆம் தேதிக்குள் <

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் 45 கருப்பையா 55. இவர்கள் கோவில்பாறை கண்மாய் அருகேயுள்ள அவர்களது நிலத்தில் குடியிருந்து விவசாயம் செய்கின்றனர். நேற்றிரவு தோட்டத்தில் இருவரும் எலுமிச்சை பழங்கள் பறித்து டூ வீலரில் ஏற்றுவதற்காக நடந்து வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கரடி திடீரென கருப்பையா, மணிகண்டன் இருவரையும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். வனத்துறையினர் விசாரிகின்றனர்.
Sorry, no posts matched your criteria.