India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மக்களவை தொகுதியில் மொத்தம் 253 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 353 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அவற்றில் வாக்கு சாவடி நுண்பாா்வையாளா் குழு நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த வாக்குச் சாவடி பகுதியில் கூடுதல் எண்ணிக்கையில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு வாக்குப் பதிவு நடவடிக்கைகள் முழுமையாக விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படும் என தேர்தல் அலுவலர் அறிவிப்பு
போடி இராசிங்காபுரத்தை சேர்ந்த மூதாட்டி சிந்தாமணி என்பவரை 21.08.14 அன்று கொலை செய்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த சேதுபதி என்பவரை போடி தாலுகா போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்.5) குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார்.
தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு இன்று என்ஆர்பி செவிலியர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் அனைத்து பொதுமக்களும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தேர்தலில் அனைத்தும் பொதுமக்களும் 100 சதவிதம் வாக்களிப்பது அவசியம் குறித்து செவிலியர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேனி அருகே கைலாசநாதர் கோவில் பின்புறத்தில் உள்ள காப்புகாட்டில் தீ பற்றி எரிந்தது. இது தொடர்பாக பெரியகுளம் அருகே சரத்து பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரை (29) மற்றும்
அதே ஊரைச் சேர்ந்த சிவா ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் ராஜ்குமாரை கைது செய்து நேற்று பெரியகுளம் சப் ஜெயிலில் அடைத்து தப்பி ஓடிய சிவாவை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேனி திட்ட சாலை 3 ஆவது வடக்கு தெருவில் நாணல் புதரில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேனி விஏஓ ஜீவா சென்று பார்த்தார். டி.ஷர்ட்டும் கைலியும் அணிந்த நிலையில் 70-80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக இருந்துள்ளார். அவர் பற்றிய தகவல்கள் தெரியாததால் தேனி காவல் நிலையத்தில் விஏஓ புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லோயர் கேம்ப் அரசு பள்ளியில் தன்னார்வலர்கள் பசுமை வனம் அமைக்க அனுமதி பெற்று மரம் நடவு செய்தனர். அதே வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோயர் கேம்ப் காவல் நிலையத்தில் தன்னார்வலர்கள் மீது பொய் புகார் அளித்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்து எழுச்சி முன்னணி சார்பாக இராமமூர்த்தி, கோம்பை இளம்பரிதி ஆகியோர் தலைமையில் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மக்களவை தேர்தலையொட்டி வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடம் வாங்கப்படும் பொருட்களில் துண்டு பிரசுரங்கள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வினை இன்று (ஏப்.4) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் துவக்கி வைத்தார்
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
தேனி மக்களவை தொகுதியில் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்.06 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் விடுப்பட்ட நபர்களுக்கு இரண்டாவது முறையாக வருகின்ற ஏப்.09 அன்று வாக்குப்பதிவு செய்திட வாய்ப்பளிக்கப்படுகிறது என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.வீ. சஜீவனா அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.