Theni

News April 18, 2024

தேனி: ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,225 வாக்குச்சாவடிகளில் , 1469 தலைமை வாக்குப்பதிவு அலுவலர்கள்,  நிலை 1 முதல் 4 வரை என மொத்தம் 6,074 பேர் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கான பணி கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான பணி ஆணை இன்று சம்பந்தபட்ட தாலுகா அலுவலகங்களில் வழங்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார். 

News April 18, 2024

வாக்களிக்க பெயரை உறுதி செய்ய வேண்டும்

image

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.

News April 18, 2024

கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா

image

தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் சித்திரை பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் மே 7 ஆம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (ஏப்.17) வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

News April 18, 2024

25% இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான 2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீட்டில் நுழைவு நிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு (www.rte.tnschools.gov.in) என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

தேனி தொகுதியில் 25799 இளம் வாக்காளா்கள்

image

தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 201 ஆண்கள், 8 லட்சத்து 25 ஆயிரத்து 529 பெண்கள், 219 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட 16 லட்சத்து 22 ஆயிரத்து 949 வாக்காளர்களாக உள்ளனா். வாக்காளா் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 14,193 ஆண்கள், 11,602 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 என மொத்தம் 25,799 இளம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

News April 18, 2024

1788 வாக்குச் சாவடிகளில் நாளை வாக்குபதிவு

image

தேனி மக்களவைத் தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 888 இடங்களில் மொத்தம் 1788 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாளை (ஏப்.19) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது.

News April 18, 2024

கம்பம் கௌமாரியம்மன் கோயில் திருவிழா

image

தேனி மாவட்டம் கம்பத்தில் ஸ்ரீ கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை 6 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கம்பம் கௌமாரியம்மன் கோவில் திருவிழா ஒரு வார காலம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற நிகழ்வில் கம்பம் பகுதியை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 17, 2024

தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நிறைவு

image

தேனி மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 100 கி.மீ. தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நடைபெற்றது. இப்பேரணி அல்லிநகரம் நகராட்சியில் இன்றுடன் நிறைவு பெற்றது. மேலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News April 17, 2024

தேனி: பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

image

மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக இன்று முதல்(ஏப்.17,18,19) வரை பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை தீவிர களப் பணியாற்றிட வேண்டும் எனவும், 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் மேலும் தெருக்கள், குறுகிய வீதிகளிலும் ரோந்து செல்ல வேண்டும் என தேனி தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

News April 17, 2024

தேனியில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் இன்று(ஏப்.17) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.