India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேவதானப்பட்டி மூங்கிலணையில் வேண்டிய வரங்களை வாரி வழங்கும் கற்பக விருட்சமாய், பக்தர்களின் இன்னல்களை அகற்றி அரவணைக்கும் காமதேனுவாய் அருள்பாலிக்கிறாள் மூங்கிலணை காமாட்சி. பிள்ளை வரம், திருமணப் பாக்கியம், தொழில் முன்னேற்றம் வேண்டுவோர், மனமுருகி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கே வந்து அம்மனை வழிபடும்போது கௌளி ஒலித்தால் அப்போது, வேண்டியது நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை.

கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச்.15) ரோந்து பணி மேற்கொண்டனர். கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சிவமூர்த்தி என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 37 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சிவமூர்த்தியை கைது செய்தனர்.

தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 16) நீர்மட்டம்: வைகை அணை: 59.84 (71) அடி, வரத்து: 114 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.75 (142) அடி, வரத்து: 50 க.அடி, திறப்பு: 322 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: 0 க.அடி, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 70.71 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 32.60 (52.55) அடி, வரத்து: 9 க.அடி, திறப்பு: இல்லை.

போடி குரங்கணி – டாப் ஸ்டேஷனுக்கு மீண்டும் ரோப்கார் அமைக்கும் திட்டம் துவக்கப்படுமா என எதிர்பார்ப்பு உள்ளது. திட்டம் செயல்படுத்துவதாக அமைச்சர்கள் அறிவித்தும் நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் இல்லை.சுற்றுலா வருகை அதிகரித்து வரும் நிலையில் குரங்கணி டாப் ஸ்டேஷனுக்கு ரோப்கார் அமைப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.பல லட்சம் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மக்கள் அரசுக்கு வலியுறுத்தினர்.

தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் ராஜவாய்க்கால் பகுதியில் ரூ.2.26 கோடி மதிப்பில் துார்வாரும் பணியை நகராட்சி துவங்கி உள்ளது. இந்த வாய்க்காலில் 5 இடங்களில் தரைப்பாலம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 95 மீ., நீளம், 9 மீ., அகலம், 3 மீ., ஆழத்திற்கு துார்வாரும் பணிகள் நடக்க உள்ளது. மொத்தம் ஐந்து இடத்தில் தரைப்பாலமும் புதிதாக அமைக்கப்பட உள்ளது.

தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன். அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவரது சகோதரி செல்வி 50. கடந்த நவம்பரில் முருகன் உடல் நிலை பாதிப்படைந்ததால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதனிடையே முருகனின் ஏ.டி.எம்., கார்டை எடுத்து செல்வி முருகனின் அனுமதி இல்லாமல் ரூ. 5.04 லட்சத்தை எடுத்தார். தங்கை பண மோசடி செய்ததை முருகன் கண்டறிந்து போலீசில் புகாரளித்தார்.

தற்போதைய சூழலில் பலருக்கும் குழப்பம்,மன அழுத்தம் இருந்து வருகிறது தீராத மன அழுத்தம் நீங்க தேனி மாவட்டத்தில் உள்ள இந்த கோவில்களுக்கு செல்லலாம். அனுமந்தன்பட்டியில் உள்ள அனுமன் கோவில், பெரியகுளம் கைலாசநாதர் கோவிகளுக்கு சென்று, அங்கு நடைபெறும் நித்ய பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் மன அழுத்தம் நீங்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .

தேனி, கூழையனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் யுவஸ்ரீ (17). 12-ம் வகுப்பு மாணவியான இவருக்கு சில வருடங்களாக வயிற்று வலி இருந்ததால் மாணவியால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த மாணவி நேற்று முன்தினம் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (மார்.14) அவர் உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை.

தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 15) நீர்மட்டம்: வைகை அணை: 59.84 (71) அடி, வரத்து: 253 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 153 க.அடி, திறப்பு: 344 க.அடி, மஞ்சளார் அணை: 31.45 (57) அடி, வரத்து: 1 க.அடி, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 70.71 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 32.20 (52.55) அடி, வரத்து: 9 க.அடி, திறப்பு: இல்லை.

இன்றைய வேளாண் பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் உள்ள மலைவாழ் விவசாயிகள் நலனைக் காக்க மலைவாழ் உழவர் நலத் திட்டம் தேனி உட்பட 20 மாவட்டங்களில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ,தேனி உட்பட 20 மாவட்டங்களில் வசிக்கக்கூடிய மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.