India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சையை அடுத்த மேலவஸ்தாசாவடி, ராவுசாப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வினோத் என்ற நவநீதகிருஷ்ணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அம்மாப்பேட்டை அருகே கோவிலூர் கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா(59). இவரது மனைவிகள் செல்வராணி(55), ராணி(54) இருவரும் சகோதரிகள் ஆவர். இவரது பேரன் ஹரிஹரன்(10) நேற்று முன்தினம் இரவு பேரனை பஸ்சில் ஏற்றி விடுவதற்காக அழைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற கார் இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கவிஞர் தமிழ்ஒளி 60ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நேற்று தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு, தஞ்சை தமுஎகச தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், தமிழ்ஒளி நூற்றாண்டுக்குழு பொருளாளரும், கல்வியாளருமான தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பேராவூரணி அருகே வீரியங்கோட்டை-உடையநாடு ராஜராஜன் நர்சரி, பிரைமரி பள்ளியில் மாணவ-மாணவிகள் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க பெற்றோர்களிடம் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இது தத்ரூபமாக வாக்கு பதிவு நடைபெறுவது போலவே இருந்தது. குழந்தைகள் அமைதியான முறையில் வாக்கு பதிவு செய்தனர்.
கரும்புக்கான நிலுவை தொகையை வழங்கக் கோரி திருஆரூரான் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள், கும்பகோணம் கோட்டாட்சியரகத்துக்கு நேற்று(மார்ச் 28) வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க முடிவு செய்து வந்தனா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினா், உரிய அனுமதி பெற்ற பின்பு சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா். இதை ஏற்ற விவசாயிகள் மாா்ச் 30ம் தேதி சந்திப்பதற்கான மனுவை அளித்து சென்றனர்.
பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குழுவினர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது ரூ.64 ஆயிரத்து 680 எடுத்து சென்றது தெரிய வந்தது. இந்த பணத்திற்கு அவர்களிடம், உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை பாபநாசம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
கும்பகோணத்தில் நேற்று(மார்ச் 28) அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, புனித வெள்ளியையொட்டி இன்று (மார்ச் 29) காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிலுவை பாதை நிகழ்ச்சி நடக்கிறது.
பூதலூர் அருகே குணமங்கலத்தை சேர்ந்தவர் சுதீஷ் (25). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த கிரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கிரி, ஜீவா, குணால், குமார் ஆகியோர் சுதீஷ் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறு செய்து சரமாரியா தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுதீஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குணாலை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி மேலவீதியில் மாநகராட்சி சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நேர்மையாக 100% வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வண்ண கோலப் போட்டி இன்று(மார்ச் 28) நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். இதில் பெண்கள் ஆர்வமுடன் கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.16 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாகத் விடுவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.