Thanjavur

News April 14, 2024

ராமசாமி கோவிலில் தங்க கருட வாகனத்தில் சாமி வீதி உலா

image

கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசாமி  இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நேற்று முன்தினம் தங்க கருட வாகன வீதியுலா மற்றும் ஓலைசப்பரம் நடந்தது. நேற்று மேட்டு தெரு, வியாசராயர் தெரு, பத்மநாபன் தெரு, பாட்ராச்சார் தெரு ஆகிய பகுதிகளுக்கு பல்லக்கு வீதி யுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

News April 13, 2024

தஞ்சாவூர் மழைப்பொழிவு விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஈச்சன்விடுதியில் 5 செ.மீட்டரும், வெட்டிகாடில் 3 செ.மீட்டரும், குறுங்குளத்தில் 2 செ.மீட்டரும், மற்றும் அய்யம்பேட்டை, அதிராமப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 1 செ. மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News April 13, 2024

தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வாட்டி வந்த வெயிலால், தற்போது பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

லாரி மோதி குழந்தை உயிரிழப்பு

image

தஞ்சை, கபிஸ்தலம் அருகே பூதங்குடியில் ஐயப்பன்- காசியம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களது ஒன்றரை வயது குழந்தை ராஜஸ்ரீ வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி குழந்தை மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜஸ்ரீ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போலீசார், லாரி ஓட்டுநர் பிரசாத் என்பவரை கைது செய்தனர்.

News April 13, 2024

தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

image

தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கும்பகோணம் தபால் கோட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். கும்பகோணம் தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கும்பகோணம் பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது.

News April 12, 2024

தஞ்சை பகுதிகளில் மழை

image

தஞ்சை, பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த வேலையில் இன்று (12.04.2024) காலை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மற்றும் தேர்தல் வேலையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

News April 12, 2024

தஞ்சை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

image

தஞ்சையில் 14, 16-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி தேர்வு நாளை சனிக்கிழமையும், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு வருகிற 14-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் தேர்வு நடக்கிறது. இதில் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வெள்ளை சீருடையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

News April 12, 2024

தஞ்சை மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தஞ்சை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 12, 2024

நாடியம்மன் கோவில் தேர் திருவிழா

image

பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவில் மாலை 4.40 மணிக்கு பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் நாடியம்மன் வீதிவலம் தொடங்கியது. தேரடித்தெரு, வடசேரி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக தேர் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வந்தனர்.

News April 11, 2024

தஞ்சாவூர் போலீசார் கடும் எச்சரிக்கை

image

தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காவல் துறை வாகனம், ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்தப்படும் நீல, சிவப்பு நிற ஒளி விளக்குகளை முறையான அனுமதியின்றி தனியார் வாகனத்தில் பயன்படுத்தினால் மோட்டார் வாகன சட்டத்தின்படி, தொடர்புடைய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தது.