India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் எழில் கொஞ்சும் இயற்கையில் மட்டுமில்லாமல், பண்பாடு ரீதியிலும் மிகவும் செழிப்பான மாவட்டமாகும். தமிழகத்தின் மிக பழமையான மாவட்டங்களில் ஒன்றாக விளங்கும் தஞ்சையில் 2 மாநகராட்சிகள், 9 தாலூகாக்கள் மற்றும் 906 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. சுமார் 26 லட்சம் மக்கள் தொகை கொண்ட தஞ்சை மாவட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தஞ்சை என்றால் உங்கள் ஞாபகத்திற்கு வருவது என்ன? SHARE !
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்க் கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 381 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் லேசாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சற்றுமுன் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தஞ்சை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது, தஞ்சாவூர், ராமாபுரம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தஞ்சாவூர் கோடியம்மன் கோவிலில் இன்று 17 ஜோடிகளுக்கு இலவச திருமண நடைபெற்றது. தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில், மத்திய மாவட்ட செயலாளரும் – திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமார் (46). இவர் தொழில் சம்பந்தமாக தஞ்சாவூர் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு காரில் சென்றுள்ளார். அப்போது வளம்பக்குடி அருகே இயற்கை உபாதைக்காக காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் 50,000 ரொக்கம், தங்க செயின் வழிப்பறி செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரபியா, மயூரி, தேவயாணி, காமரசவள்ளி ஆகிய நான்கு திருநங்கைகளை கைது செய்தனர்.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-23 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT
கும்பகோணம் மாத்தி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார். இசைக்கலைஞரான இவர் கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து இருந்தார். அப்போது செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயகுமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூா் – பட்டுக்கோட்டை சாலையில் கறம்பியம் அருகில் எதிரில் வந்த லாரி மோதிய விபத்தில் தஞ்சாவூர் சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தத் துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர், பாப்பா நாடு சாலை விபத்தில் இறந்த சிறப்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விபத்தில் இறந்த உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என கூறினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய வாலிபர் ஒருவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இவர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 9 வயதுடைய பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லைஅளித்ததாகசம்பந்தப்பட்ட மாணவியின் தாயார் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
Sorry, no posts matched your criteria.