India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக போலியோ விழிப்புணர்வு தினமான இன்று(24.10.24) பட்டுக்கோட்டையில் மனோரா ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லாரல் மேல்நிலைப்பள்ளி , ஆலத்தூர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற 2 பேரை ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர். சிவராஜ் என்பவரை தாக்கி ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியைப் பறித்த 2 பேர், தாமஸ், பிரவீன், கைது செய்யப்பட்டு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சை பெரிய கோவில் உண்டியல்கள் மாதந்தோறும் , எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், 11 உண்டியல்கள் அறநிலையத் துறை அலுவலர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இப்பணியில் வங்கி ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதன் மூலம் பக்தர்கள் ரூ. 48 லட்சத்து 77 ஆயிரத்து 462 ரொக்கமும், 35 கிராம் தங்கமும், 302 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியது தெரியவந்துள்ளது
டெல்லியில் இன்று தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்கரியை நேரில் சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான பல்வேறு சாலை திட்டங்கள் மற்றும் திருவையாறு சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் புதிய உயர்மட்ட பாலம் அமைத்திடவும் கோரிக்கை மனுவை அளித்தார்.
பூதலூர் அருகே இந்தளூர் வெண்ணாற்றில் மணல் எடுப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் பூதலூர் சப் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொழுது அங்கு 5 மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை, ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன் குடிகாடு பகுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பேய்கரும்பன் கோட்டையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மைத்துனர் பன்னீர்செல்வம் என்பவரது வீட்டில் ஆட்கள் இல்லாத காரணத்தினால் உறவினர்களை வைத்து கடப்பாரையால் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அடுத்த உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் இல்லத்தில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னையில்அவர் குடியிருக்கும் எல்எல்ஏ விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2011-16 காலத்தில் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
திருவோணத்தை அடுத்த நெய்வேலி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிக்கண்ணு(82) – லட்சுமி(73) தம்பதி. சம்பவத்தன்று இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். பின்னர் மறுநாள் வீடு திரும்பிய போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த ரூ.9 ஆயிரம், 35 பட்டுசேலைகள், 25 பட்டு வேட்டிகள் உள்ளிட்ட சில பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மருத்துவக்கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், மாதாகோட்டை, வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ரெட்டிப்பாளையம் ரோடு, ஜெபமாலைபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.