Thanjavur

News April 25, 2024

தஞ்சையில் 2 நாட்கள் நம்மாழ்வார் திருவிழா

image

தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நம்மாழ்வார் திருவிழா வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில், பாரம்பரிய உணவுப் பொருள்கள் கொண்ட கண்காட்சியும் இடம்பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

News April 25, 2024

தஞ்சாவூர் அருகே தேரோட்டம்

image

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத திருக்கோவில் சித்திரை திருவிழா சித்திரை 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சுவாமி காலை மாலை பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. 9ம் திருநாளான இன்று காலை சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என்று முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

News April 25, 2024

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் சிறப்புகள்!

image

முல்லைவனநாதர் கோவில், காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவதலமாகும். புராணத்தின் படி முல்லை கொடி சூழ்ந்த இக்கோவில், 18ஆவது தேவராப்பாடல் பெற்ற தலமாகும். மேலும், பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்றான முல்லைவனத் தலமாகும். குறிப்பாக வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கம் இன்றும் வழக்கில் உள்ளது கூடுதல் சிறப்பாகும். இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபம் உள்ளது.

News April 25, 2024

தஞ்சை: 1,000 ஏக்கர் பயிர்கள் நாசமாகும் அபாயம்

image

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி, தியாகசமுத்திரம், அலவந்திபுரம், புள்ளபூதங்குடி, கூனஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கரில் நெல், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மும்முனை மின்சாரம் சரிவர வழங்காததால், இந்த பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி நாசமாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

News April 25, 2024

தஞ்சாவூர் அருகே வெடிகுண்டு மிரட்டல்

image

நேற்று முன் தினம் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்த ஒருவர் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தெப்பக்குளம் அருகே வெடிகுண்டு உள்ளதாக கூறியுள்ளார். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த போலீசார் மயிலாடுதுறையை சேர்ந்த சிங்காரவேலு என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் போதையில் செய்து உள்ளார்.இன்று (ஏப்,24) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 25, 2024

தஞ்சை: பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி 2 பேர் பலி

image

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வேம்பக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர்கள் ஜெகன்(30), பாக்யராஜ்(39). இவர்கள் இருவரும் நேற்று(ஏப்.23) பைக்கில் தஞ்சை-விக்ரவாண்டி நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது, வேம்பக்குடி அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து கும்பகோணம் சென்ற சரக்கு ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

News April 25, 2024

அரசு பேருந்து கவிழ்ந்து பலி; 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

image

கும்பகோணத்தில் இருந்து இன்று(ஏப்.24) காலை தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, அய்யம்பேட்டை ஸ்டார் லைன் கல்லூரி அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லட்சுமி(50) என்பவர் உயிரிழந்தார்.

News April 25, 2024

தஞ்சை: உலக புத்தக நாள் விழாவையொட்டி நன்கொடை

image

உலக புத்தக நாளையொட்டி, தஞ்சாவூரில் நேற்று(ஏப்.23) வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 500 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இதில், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராமச்சந்திரன் புத்தகங்களை வழங்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் பெற்றுக்கொண்டு, தலைமையாசிரியை சிவசங்கரியிடம் வழங்கினாா்.

News April 24, 2024

தஞ்சையில் புத்தக தின விழா கொண்டாட்டம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூச்சந்தை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பொது அறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் தஞ்சை பூச்சந்தையில் உள்ள பழக்கடைக்காரர் ஹாஜாமொய்தீன் ஆகியோர் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்கள்.

News April 24, 2024

பக்தரிடம் செல்போன், பணம் திருடிய 3 பெண்கள் கைது 

image

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் கடந்த மார்ச் 20ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பக்தர் ஒருவரின் செல்போன், ரூ.500 ஆகியவற்றை திருடியதாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட சுபத்திரா, சுகந்தி, சுனிதா ஆகிய 3 பேரை இன்று கைது செய்து விசாரிக்கின்றனர்.