India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகப் புகழ்பெற்ற பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. கட்டிட கலைக்கும் – சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக உள்ள கோவிலை காண அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொடர் விடுமுறையொட்டி தமிழகம் மட்டும் அல்லாமல் மாநிலத்தின் பிறபகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இன்று கண்டு ரசித்தனர்.
2024ஆண்டுக்கான விளையாட்டு விடுதிமையம், முதன்மைவிளையாட்டு மையம், சிறப்புநிலை விளையாட்டு மையத்தில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.விளையாட்டு விடுதிக்கு 26.04.2024-08.05.2024 வரையும் சிறப்புநிலை விடுதிக்கு 26.04.2024 -05.05.2024, முதன்மைநிலை விளையாட்டு விடுதிக்கு 26.04.2024-06.05.2024 வரை www.sdat.gov.it இணையவழியில் மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மே 5 நீட் தேர்வு நடைபெறவுள்ளது. அதன்படி, தாமரை பன்னாட்டு பள்ளியில் 1,608, சாஸ்திர நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 1,104, பிளாசம் பப்ளிக் ஸ்கூல் 480, மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 600, கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் 648, கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 648, பட்டுக்கோட்டை லாரன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் 287 என மொத்தம் 7 மையங்களில் 5,375 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
திருவாரூர் சந்திப்பில் இருந்து பட்டுக்கோட்டைக்கு புதிய சிறப்பு ரயில் (06851/06852) (மே.3) இன்று காலை இயக்கப்பட்டது. இந்த ரயில் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இயங்கும். திருவாரூரில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு காலை 10.05 வரும், மீண்டும் பட்டுக்கோட்டையில் மாலை 5.15 புறப்பட்டு 6.55 மணிக்கு திருவாரூர் சென்றடையும். இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓய்வுபெற்ற IAS அதிகாரி பாலசந்திரன் 60 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலில் 7, 8 வகுப்பு படித்தபோது ராமசாமி என்ற தமிழ் ஆசிரியர் பாடம் எடுத்துள்ளார். ஆசிரியர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரது குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்த பாலச்சந்திரன், நேமம் கிராமத்தில் உள்ள ஆசிரியர் மனைவிக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தியும், பேரனுக்கு மாடு வாங்க ரூ.45,000பணம் கொடுத்து உதவியுள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்த கோயிலில் மாரியம்மன், புற்று வடிவில் காட்சிதருகிறார். இது தஞ்சாவூர் அரண்மனைக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஒரு தீர்த்தக் குளமும் உள்ளது. சோழர் மற்றும் மராட்டிய காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். இங்கு பிரசாதமாக புற்று மண் வழங்கப்படுகிறது.
கும்பகோணம் சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(48). பாலக்கரை பகுதியில் தரைக்கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம்(மே 1) வெயிலில் வியாபாரம் செய்து வந்த மகேந்திரன் திடீரென சுருண்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தாரா அல்லது உடல்நிலை குறைவா என உடற்கூறு ஆய்வு முடிவிற்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து அலுவலர் சரவணபவன் (பொறுப்பு) விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் அறிவுரையின்படியும், தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படியும், பொதுமக்களின் வசதிக்காக தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மே 4ம் தேதி ஓட்டுநர் உரிமம் வழங்கல் பணிகள் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என கூறியுள்ளார்.
திருச்சி மண்டல உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுரையின்பேரில், கட்டணமில்லா தொலைபேசி எண்கள் குறித்த போஸ்டர் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உணவு பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் பஸ் நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800 599 5950 ஒட்டப்பட்டுள்ளன.
திருவையாறு அருகே தில்லைஸ்தானம் ஸ்ரீ அலர்மேல்மங்கா நாயிகா ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் ப்ரஹ்மோத்ஸவ விழாவில் நேற்று(மே 1) தேரோட்டம் நடந்தது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள, தேருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்ததை தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளை வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. இதை தொடர்ந்து மாலை தொட்டி திருமஞ்சனம் நடந்தது.
Sorry, no posts matched your criteria.