Thanjavur

News December 19, 2024

தஞ்சை: பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு

image

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி நவம்பர் 2024 பருவத் தேர்வு முடிவுகளை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் வெளியிட்டார். www.kngac என்னும் இணையதளத்தில் மாணவிகள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மறுகூட்டல், விடைத்தாள் ஒளிநகல் பிரதிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24.12.2024 க்குள்ளும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க 06.01.2025 க்குள்ளும் விண்ணப்பிக்க அறிவுறுத்தபட்டுள்ளது

News December 19, 2024

இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

image

கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரம் அண்டக்குடையான், சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழையினால் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கி அழுகிய பயிர்களை கணக்கெடுக்க வராத அதிகாரிகளை கண்டித்தும், ஏக்கருக்கு ரூபாய் ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டி அழுகிய பயிர்களை கையில் ஏந்தி விவசாயிகள் வயலில் இறங்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ஏ. எம். ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News December 19, 2024

தஞ்சையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

image

தஞ்சையில் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நாளை (டிச.20) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரி கலந்து கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு 04362-237037.

News December 19, 2024

தஞ்சை: வீடுகளில் கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தல்

image

கும்பகோணம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கடந்த சில நாட்களாக நடைபெறும் குற்றங்கள் தனிமையாக வசிக்கும் சிலரை நோக்கியே நடைபெற்றுள்ளது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகிறது. எனவே தனிமையாக வசிக்கும் முதியவர்கள் மற்றும் பிற மக்கள் தங்களது பாதுகாப்புக்காக வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, அதனை குடும்ப உறுப்பினர்கள் பார்க்கும் படி வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 18, 2024

நிதித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எம்.பி

image

டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, ( NIFTEM ) தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் வளர்ச்சி பணிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு நிதி வேண்டி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கோரிக்கை வைத்தார். 

News December 18, 2024

கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

கபிஸ்தலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. கடந்த 2016-ஆம் பொங்கல் பண்டிகையின் போது பிரபுவுக்கும் சிலருக்கு முன் விரோதம் ஏற்பட்டது. இதில் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரபு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விஜயராஜ் என்பவருக்கு ஆயுள்‌ தண்டனை மற்றும் அபராதம் விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

News December 18, 2024

தஞ்சை கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது

image

தஞ்சாவூர் கோடியம்மன் கோவில் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபட்டு வந்த போது அவ்வழியே நம்பர் பிளேட் இல்லாமல் வந்த சொகுசு காரை வழிமறித்து காவல்துறையினர் சோதனை ஈடுபட்டனர். அப்போது காரில் ரகசிய அறை வைத்து அதில் 103 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 103 கிலோ கஞ்சா, கார் மற்றும் காரில் இந்த மூன்று நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 17, 2024

குடந்தையில் சிபிஎம் கட்சியின் மாவட்ட மாநாடு

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மக்கள் நான் காக்க அயராது பாடுபடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் தஞ்சை மாவட்ட 24 வது மாநாடு நடைபெற்றத. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியில் இருந்து புறப்பட்ட பேரணி புறப்பட்டு மாலை 6 மணி வரை காந்தி பூங்கா சாலையில் முடிவுற்றது. பின்னர், சீத்தாராம்யெச்சூரி நினைவரங்கத்தில் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News December 17, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம்

image

தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கள ஆய்வு 18.12.2024 புதன்கிழமை மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் பழைய பேருந்து நிலையம் அருகில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்

News December 17, 2024

கும்பகோணத்தில் நூதன மோசடி – இளைஞர் கைது

image

கும்பகோணம், வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்த தனராஜ் – உஷா தம்பதி. இந்நிலையில் கடந்த நவ.12ஆம் தேதி உஷா வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள், மாநகராட்சி ஊழியர்கள் எனக்கூறி தங்க நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரபத்திரன் என்ற இளைஞரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!