Thanjavur

News January 3, 2025

சுவாமிமலையில் நடிகர் விமல் சாமி தரிசனம் 

image

கும்பகோணம் வட்டம் அடுத்த சுவாமி மலை கோவிலில் மார்கழி மாத பூஜை நடைபெற்ற வருகிறது. இதனை தொடர்ந்து இன்று 03.01. 2025 காலை 6 மணி அளவில் களவாணி பட நடிகர் விமல் மற்றும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் சுவாமி மலையில் உள்ள முருகனை தரிசித்து ஆசி பெற்றனர் .

News January 3, 2025

விவசாயிகளுக்கு தஞ்சை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் வேளாண்மை பொறியியல்துறை சார்பில் சிறு குறு விவசாயிகள் தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார்கள் வாங்கவும், புதிய விவசாய இணைப்புகளுக்கு புதிய மின் மோட்டார்கள் வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது. மொத்த விலையில் 50% (அ) அதிகபட்சமாக 15,000 ரூபாய் மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

தொடர் இரு சக்கர வாகனம் திருட்டு – சிறுவன் உட்பட 3 பேர் கைது.

image

கபிஸ்தலம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன், அப்பு மற்றும் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 லட்சம் மதிப்புள்ள ஆறு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News January 3, 2025

தலைமை ஆசிரியரை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு

image

அக்கரைவட்டம் பகுதியை சேர்ந்தவர் தமயந்தி. இவர் பொய்யுண்டார் குடிகாடு அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணி முடிந்து தனது கணவருடன் இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் இருவரையும் தாக்கி தமயந்தி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். வழிப்பறி குறித்து வழக்கு பதிவு செய்த ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 3, 2025

திருவையாறு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

image

திருவையாறு, மேலப்பத்திருபந்துருத்தி, சேதுபவாசத்திரம், திருப்பறம்பியம் ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்துறை அறிவித்துள்ளது.

News January 2, 2025

தஞ்சை மாவட்டத்தில் சாலை விபத்துக்களில் 558 பேர் பலி

image

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும், 534 சாலை விபத்துகளில் 558 உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இது 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.8 சதவீதம் குறைவாகும். 2023-இல் தஞ்சை மாவட்டத்தில் 609 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சாலை விபத்துகளை சரிவர பின்பற்றி விபத்தில்லா மாவட்டமாக தஞ்சாவூரை மாற்ற உறுதியேற்போம். செய்தியை ஷேர் செய்யவும்!

News January 2, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சாா்பில், 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 21, 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள மாணவ மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரையோ அல்லது முதல்வரையோ அணுகி படிவங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

தஞ்சை வந்த 2500 டன் அரிசி

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்பு திட்டத்தின் கீழ் சர்க்கரை ,கரும்பு ,பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில், டெல்டா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 2,500 டன் பச்சரிசி சரக்கு ரயில் மூலம் தஞ்சைக்கு வந்தது.

News January 2, 2025

ராஜகிரி: தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

image

பாபநாசம் தாலுகா, ராஜகிரி ஊராட்சி, மணல்மேடு கிராமம் கீழத்தெருவை சோ்ந்தவர் வீரையன் (67). தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், நேற்று ராஜகிரியில் ஒருவரது வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத வகையில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 1, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் 860 செல்போன்கள் மீட்பு 

image

2024 ஆண்டில் மட்டும் 3433 காணாமல் போன செல்போன்களில்  2417 கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 860 செல்போன்கள் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 363 இணையவழி குற்றங்களில் தொடர்புடைய சிம்கார்டுகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அவை முடக்கம் செய்யப்பட்டுள்ளன. குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலமாக தண்டணை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!