Thanjavur

News April 3, 2026

தஞ்சை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

கோடைக் காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சியில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News April 3, 2026

தஞ்சை மாவட்டத்தில் 28 பேர் வேட்புமனு தாக்கல்

image

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் இரண்டாம் நாளான நேற்று 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்க நாளான மார்ச் 30ம் தேதி 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் மொத்தம் 28 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

News April 3, 2026

தஞ்சை: காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திமுக-வுக்கு ஆதரவு

image

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக ஆர். வைத்திலிங்கம் போட்டியிட உள்ளார். இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ். பழனியப்பன், அவரை ஒரத்தநாட்டில் சந்தித்து, சங்கத்தின் ஆதரவை தெரிவித்துக் கொண்டார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 3, 2026

தஞ்சை: தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் தொலைக்காட்சி மற்றும் ஊடக செய்திகள் கட்டுபாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில், சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர்கள் திவேஷ் செஹரா, கேஷ்வேந்திர குமார், அருண் குமார், சர்ஜித் கவுர் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தஞ்சை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு சிறை

image

தஞ்சாவூர் சேகரன் நகரைச் சேர்ந்த ஜோதிமணி வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 87½ சவரன் தங்க நகைகள் திருட்டப்பட்ட வழக்கில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மொய்தீன், ஷாஜகான், ஆயிஷா பர்வீன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர், மொய்தீன், ஷாஜகான் ஆகியோருக்கு 6 ஆண்டுகளும்; ஆயிஷா பர்வீனுக்கு 3 ஆண்டுகளும் சிறைதண்டனை வழங்கினார்.

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 2) இரவு 10 முதல் இன்று (ஏப்ரல் 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 2, 2026

தஞ்சை: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் கடன்..!

image

தஞ்சை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!