Thanjavur

News January 11, 2025

Way2Newsல் நிருபராக விருப்பமா?

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள், <><இங்கே கிளிக் செய்யவும்><<>>. அதில் உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்து, இப்போதே கூடுதல் வருவாயை ஈட்ட தொடங்குங்கள். மேலும் விவரங்களுக்கு 9542922022 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News January 11, 2025

தஞ்சை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இன்று (ஜன.11) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் அறுவடைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. SHARE NOW!

News January 11, 2025

பெரியார் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது வழக்கு

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் திராவிட கழகம் சார்பில் மனு அளித்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை செய்து பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக பெரியார் குறித்து அவதூறு பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 11, 2025

தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உடையவர்கள்<> tnvelaivaaippu.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெற்று வருகிற 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

தஞ்சை மாவட்டத்தில் மது விற்பனைக்கு 2 நாட்கள் தடை

image

தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான விற்பனை கடைகள், அத்துடன் இணைத்த மதுபான கூடங்கள் மற்றும் தனியார் விடுதிகளில் உள்ள மதுகூடங்களில் வரும் 15-ஆம் தேதி (மாட்டுப் பொங்கல்) மற்றும் 26-ஆம் (குடியரசு தினம்) ஆகிய தினங்களில் மது விற்பனை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்..

News January 10, 2025

புகையில்லா போகி பண்டிகை – ஆட்சியர் வேண்டுகோள்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போகி பண்டிகை ஒட்டி பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்கள், டயர் (ம) டியூப் போன்ற பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே காற்றின் தரத்தை பாதுகாக்க புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

News January 10, 2025

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 இளம்பெண்கள் மீட்பு: உரிமையாளர் கைது

image

தஞ்சாவூர் எல்.ஐ.சி., காலனியில் உள்ள ட்ரீம்ஸ் ஸ்பா என்ற பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெற்கு போலீசார் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். சோதனையில் பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கு இருந்த நான்கு பெண்களை மீட்டனர். மேலும் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஸ்பா உரிமையாளர் அபிசத்யா என்பவரை  கைது செய்தனர்.

News January 10, 2025

தஞ்சை: மத்திய அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

image

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் – தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் உண்டுறைவிட பள்ளி சிபிஎஸ்சி பாடத்திட்டத்தினை கொண்ட அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான 6 வகுப்பு முதல் 9 வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உடையர்கள் வரும் 13ஆம் தேதிக்குள் <>LINK<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொது விநியோக குறைதீர் கூட்டம் வருகிற 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் புகார் அளித்து தீர்வு காணலாம் என கூறப்பட்டுள்ளது.

News January 10, 2025

தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி வேண்டுகோள்

image

தஞ்சை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு, காவல்துறை, அரசு போக்கு கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!