India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.1.25 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வில் பங்கேற்கும் விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பி அதற்கான பதில் கிடைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்.இவர் நேற்று வடக்கு வாசல் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவரை வழிமறித்த நான்கு இளைஞர்கள் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தியாகராஜன் அளித்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் ரகுபிரசாத்(20), தங்கப்பாண்டி(26), மூர்த்தி (21), தனுஷ் (19) ஆகிய நான்கு இளைஞர்களை கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகள் நேற்று (ஜன.26) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு முறையாக விடுமுறை அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்காத 59 கடைகள், 7 உணவு நிறுவனங்கள், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 102 நிறுவனங்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தம்பிக்கோட்டை பகுதியில் இன்றைய (ஜன.26) காய்கறி விலை நிலவரம்: தக்காளி கிலோ ரூ.20-25, உருளைக்கிழங்கு கிலோ ரூ.40-50, சின்ன வெங்காயம் ரூ.90-95, பெரிய வெங்காயம் கிலோ ரூ.35-40, பச்சை மிளகாய் கிலோ ரூ.45, கத்தரிக்காய் கிலோ ரூ.40-55, வெண்டைக்காய் கிலோ ரூ.55-65, தேங்காய் ரூ.50, பீன்ஸ் கிலோ ரூ.45-55, சுரைக்காய் ரூ.20-25, கேரட் ரூ.55-60, பீர்க்கங்காய் ரூ.50-55 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு திருநங்கையர் விழா ஆண்டு தோறும் ஏப்ரல்-15 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசின் விருதுகள் இணையதளம் <
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராமங்களிலும் நாளை ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று தங்களின் கிராம வளர்ச்சிக்கு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் திருமதி பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக ஆளுநர் குடியரசு தினத்தன்று அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக நடக்கும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை நாங்கள் புறக்கணித்து எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம் என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தஞ்சை கோட்ட முதல் நிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை துணை மற்றும் கிளை தபால் நிலையங்களில் வருகிற ஒன்றாம் தேதி வரை ஆயுள் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் ஆயுள் காப்பீடு திட்டங்களில் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக
தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் இரா.விஜய்சரவணன் மற்றும் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும்
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜன.25) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தாலுக்கா மற்றும் வட்ட வழங்கல் அலுவலங்கங்களில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து உடனடியாக பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.