India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை ஈஸ்வரி நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு மையத்தில் 30 நாள் இலவச அழகு கலை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேநீர், மதிய உணவு மற்றும் பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.12 ஆம் தேதி கடைசி நாள் என கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் அங்கயற்கண்ணி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே கூடலூர் பகுதியில் சேர்ந்த காளிமுத்தின் மகள் மகாலட்சுமி (18). இவர் தஞ்சை, ஒரத்தநாட்டில் உள்ள அரசு கலைக் அறிவியல் கல்லூரியில் பி சி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அரசு மாணவிகள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் நேற்று காலை எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து ஒரத்தநாடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் தஞ்சை கரந்தையை சேர்ந்த சண்முகராஜ் (வயது 42), இவர் திருவையாறு அருகே உள்ள கிராமம் ஒன்றில் நிதி வசூலிப்பதற்காக சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த 19 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகாரளிக்கவே, போலீசார் சண்முகராஜை கைது செய்தனர்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
தஞ்சையில் 2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் வரை தொகை இழப்பீடு ஏற்படுத்தியதற்காக 37, பருவ கால பட்டியல் எழுத்தாளர்கள், 51 பருவ கால உதவியாளர்கள் என 88 ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கூறி , நேற்று (பிப்.5) தஞ்சையில் நடந்த ஆய்வில் தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் கார்திகைசாமி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கும்பகோணம் அருகே அமைந்துள்ள அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் உள்ள 12 உண்டியல்கள் 62 நாட்களுக்கு பின்னர் நேற்று (பிப்.4) திறக்கப்பட்டு காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. இதில் 35 கிராம் தங்கம், 1.47 கிலோ வெள்ளி, 299 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், 624 வெளிநாட்டு நாணயங்கள் என மொத்தம் ரூ.61.36 லட்சம் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் கீழவாசல் பூமால் ராவுத்தா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (22). மளிகைக் கடையில் வேலை பாா்த்து வந்த இவா் 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை புகைப்படம் எடுத்து, சிறுமியை மிரட்டியும் வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் தஞ்சை போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சத்தியசீலன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னாள் படை வீரர்களுக்கான “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் உள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடைபெறுவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தஞ்சையில் இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசான சிவம், மாவட்டச் செயலாளர் குபேந்திரன், ஒன்றிய தலைவர் திவாகர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து, வல்லத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதேபோல் பிற பகுதிகளில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்தர பராமரிப்பு பணி காரணமாக இன்று (பிப்.4) வீரமரசன்பேட்டை, பூதலூர், அச்சம்பட்டி, தஞ்சாவூர் புதிய ஹவுசிங் யூனிட், அருளானந்தர் நகர், ஒரத்தநாடு ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.