Thanjavur

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தஞ்சாவூர் மட்டும் 76 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

News February 23, 2025

கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சியர்

image

இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மஞ்சள் பையை மட்டுமே பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் வரும் மே ஒன்றாம் தேதிக்குள் தகுந்த ஆவணங்களுடன் https://thanjavur.nic.in (அ) www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News February 23, 2025

சிறப்பாக பணிபுரிந்த 8 காவலர்களுக்கு விருது

image

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மத்திய அரசின் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன்படி காவல் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு பேரும் மற்றும் பணிகள் உள்ள ஆறு பேர் என மொத்தம் 8 பேருக்கு இந்த பதக்கங்கள் வழங்கப்பட்டன.

News February 22, 2025

தஞ்சை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறும் . மற்றும் PHH பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைவிரல் ரேகையினை 28.02.2025க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, AAY மற்றும் PHH பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் நியாய விலை கடைகளில் கை கைவிரல் பதிவு செய்யுமாறு ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

கும்பகோணத்தில் நாளை மறுநாள் சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு

image

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு தாராசுரம் புறவழிச்சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News February 22, 2025

தஞ்சாவூர்: இன்று ரேஷன் கடை இயங்காது

image

தஞ்சாவூர் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, வார விடுமுறை நாளான கடந்த ஜனவரி 10ஆம் தேதி, ரேஷன் கடைகள் செயல்பட்டன. இந்த வேலைநாளை ஈடுசெய்ய, இன்று (பிப்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சனிக்கிழமை (பிப்.22) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 21, 2025

அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் அனைத்துதுறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் திரு.மா.ஆனந்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் உள்ளனர்.

News February 21, 2025

வயலில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி

image

திருச்சிற்றம்பலம் வலச்சேரிக்காடு சேர்ந்தவர் சேகர் கூலித் தொழிலாளி கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை திருச்சிற்றம்பலம் கண்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு வயலில் சேகர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2025

தஞ்சையில் வேலை வாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்தில் நாளை (பிப்.21) தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW.

News February 20, 2025

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் ஓவிய, சிற்ப கலைக் கண்காட்சி

image

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும், கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய, சிற்ப கலைக் கண்காட்சி, தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் நாளை தொடங்கவுள்ளது. இக்கண்காட்சியில்  கல்லூரியில் பயிலும் வண்ணக்கலைத்துறை, காட்சிவழித்தகவல் வடிவமைப்புத்துறை மற்றும் சிற்பக்கலைத்துறை ஆகிய மூன்று துறைகளில் பயிலும் மாணவர்களுடைய கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. 

error: Content is protected !!