India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி கிராமத்தில் மார்ச்.08 ஆம் தேதி (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு அவசியம் எனவும், தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
வல்லம், அகிழாங்கரை மேட்டு தெருவைச் சேர்ந்த இசையாஸ் என்பவரின் மகன் திரண் பெனடிக் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிறப்பு வகுப்பு முடிந்து சக மாணவர்களுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் மாடு முட்டி உயிரிழந்தார். மாணவரின் உடல் தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, கள்ளப்பெரம்பூர் அருகே வெண்ணலோடை பெண்ணாற்றங்கரை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 3 பேரை கள்ளபெரம்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். இதில் அவர்கள் தஞ்சாவூர் கூடலூர் பெரிய தெரு பகுதியைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகன் எபினேசர் (30), கீழத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (20), இளங்கோவன் மகன் கிருபாகரன் (24) என்பது தெரியவந்தது.
தஞ்சாவூரில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் தேரோட்டம் வரும் மே 7ஆம் தேதி நடைபெறுகிறது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழாவிற்கான பந்தல் கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மே 7ஆம் தேதி நடைபெறுகின்றது.
தஞ்சாவூர் மாநகராட்சி 2024ஆம் ஆண்டுக்கான சிட்டி 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் நம்பர் 1 நகரம் என்ற விருதை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சையை தூய்மையாக மாற்றுவதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒப்பந்தம் நேற்று ஜெய்ப்பூரில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
சம்யுக்த்த கிசான் மோர்சாவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25 ஆம் தேதி தஞ்சாவூரில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் பி.அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சார்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை, கல்வி கடன் உள்ளிட்ட 710 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தஞ்சாவூர் மட்டும் 76 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை விழாவை முன்னிட்டு, பெருவுடையார் கோயில் வளாகத்தில் சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் இன்று (மார்ச்.03) காலை காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் (ம) புதுச்சேரியில் நாளை தொடங்கும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதும் 8.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் 3500 மையங்களில் நடைபெற உள்ள இந்தத் தேர்வை மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். எந்தவித கவனச் சிதறலுக்கும் ஆட்படாமல் நேர்மையுடனும் துணிவுடனும் தேர்வை எழுதுங்கள்.
Sorry, no posts matched your criteria.