India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தஞ்சாவூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1 மணி வரை இந்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தி காலை முதலே ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது…SHARE NOW
கடந்த ஒரு சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று (மா.11) தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. SHARE NOW
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காசநோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையில் மருத்துவ அலுவலராகப் பணிபுரிய விருப்பம் உள்ள எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிமுன் அனுபவம் உள்ளவர்களும், அரசு மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் மார்.20 க்குள் விண்ணப்பிக்கலாம். தஞ்சை கலெக்டர் அறிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட கும்பகோணத்தில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்ச் 12ஆம் தேதி மாசி மகத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க..
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
தமிழக அரசின் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 35 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 20. இதுகுறித்து மேலும் அறிய <
கும்பகோணம்,திருபுவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோயிலில் மனிதன்,பறவை மிருகம் போன்ற கலவையாக அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல் பில்லி சூனியத்தால் துன்பப்படுவோர், தீராத நோயுற்றவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு அவர்களின் தலையெழுத்தே மாறும் என்பது ஐதீகம்.Share It
திருநள்ளாறில் அமைந்துள்ள சிவனின் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலய சனீஸ்வரன் புகழ்பெற்று விளங்குகிறார். நளன் என்னும் மன்னனை சனீஸ்வரர் துன்பப்படுத்தினார். அப்போது நளன் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கியதால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார். திருநள்ளாறு சனீஸ்வரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல பிரட்சனை தீரும் என்பது ஐதீகம். உங்கள் சங்கடங்கள் தீர ஒருமுறை இத்தலத்திற்கு செல்லுங்கள்..
தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் நிலையில் பதவி வகித்து வரும் 17 பேரை பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை துறை தனி வட்டாட்சியர் ஜி.சிவக்குமார், தஞ்சாவூர் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய பி.அருள்ராஜ் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.