India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தஞ்சையில் நடக்கிறது. இந்த முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 2000-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. மேலும் இதில் 19-25 வயதிற்கு உட்பட்ட 12 வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 6 ,7 ந்தேதி தஞ்சையில் நடக்கிறது. இந்த முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 2000க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. மேலும் இதில் 19 முதல் 25 வயதிற்கு உட்பட்ட12 வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 2024 – 25ஆம் நிதி ஆண்டிற்கு 57 நபர்களுக்கு ரூ.559 லட்சம் மானியமாக வழங்கிட இலக்கு செய்யப்பட்டுள்ளது. மூன்று வார காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கிகள், தாட்கோ மூலம் கடன் பெறலாம். இதன் திட்ட மதிப்பீட்டில் 75 லட்சம் வரை முதலீட்டு மானியம் 3% பெறலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 648 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவகல்லூரி சாலையில் கடந்த 9ஆம் தேதி ஸ்ரீராம் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஜீவா, தனுஷ், ஷாம் சுரேஷ், ஆரோக்கிய டேனியல் ராஜ், ஹரிசங்கர் ஆகிய ஐந்து பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் தலா 1,250 டன் வீதம் 21 ரயில் பெட்டிகளில் விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்குவதற்காக அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சை வெண்ணாற்றங்கரை சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (40). கூலி தொழிலாளியான இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து அவர் நேற்று யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தஞ்சை மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநில அரசுகளின் தேவைகளை உணர்ந்து தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்தினால் மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்தார்.
புதுச்சேரியை சோ்ந்தவா் கலைமணி. கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர் கும்பகோணத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டாா். அப்போது, கையில் வைத்திருந்த பையை மறந்து அங்கேயே வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த பையை கவனித்த பெண் தொழிலாளி, அதனை திறந்து பார்த்தபோது அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கக்காசுகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருந்துள்ளன. பின்னர் அவர் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கவே மோகனிடம் பை ஒப்படைக்கப்பட்டது.
திருவிடைமருதூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பூப்பந்தாட்டப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 28 ஆண்கள் அணியும், 25 பெண்கள் அணியும் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசை விருதுநகரைச் சேர்ந்த ஆண்கள் அணியும், இரண்டாம் பரிசை சிவகங்கை சேர்ந்த பெண்கள் அணியும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.