Thanjavur

News September 25, 2024

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

கும்பகோணத்தை அடுத்த உடையாளூா் மண்டபமேடு காலனி தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீசன்(25). தள்ளுவண்டியில் காய்கனி வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், இவா் 17 வயதான மனநலம் பாதித்த சிறுமிக்கு கடந்த 16-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், கும்பகோணம் போலீஸாா், ஜெகதீசன் மீது போக்சோ வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

News September 24, 2024

ரூ.21 லட்சத்தை ஒப்படைத்த பெண்

image

திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த காமராஜ் என்பவர் கடந்த 20ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது ரூ.21 லட்சம் ரொக்கத்தை தொலைத்துள்ளார். இதுகுறித்து மருவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நடுக்கடையை சேர்ந்த மங்கையரசி என்ற பெண் ரூ.21 லட்சம் தன்னிடம் இருப்பதாக தானாக முன்வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை காவலர்கள் வெகுவாக பாராட்டினர்.

News September 24, 2024

உர கட்டுப்பாடு ஆய்வகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பில் சாக்கோட்டையில் இயங்கி வரும் உரக் கட்டுப்பாடு ஆய்வகத்திற்கு தேசிய தர நிர்ணயம் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழினை மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து இன்று‌ பெற்றனர்.

News September 24, 2024

தஞ்சை மாவட்ட மக்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

வீடுகளில் நூலகங்கள் அமைத்து அதை பராமரித்து பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கு விருது மற்றும் கேடயங்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தஞ்சை மாவட்டத்தில் சிறந்த வீட்டு நூலகத்திற்கான விருது பெற தகுதி உடையவர்கள் வரும் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் dlotnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

565 மனுக்களை பெற்று கொண்ட தஞ்சை ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் பட்டா கல்வி கடன் முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை மாற்றுத்திறனாளிகள் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 565 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News September 23, 2024

பட்டுக்கோட்டை வாலிபரிடம் 15 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு

image

பட்டுக்கோட்டை சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ்(33). அதே ஊரை சேர்ந்த, லண்டனில் பணிபுரியும் சரவணன், அய்யப்பன் ஆகியோர் லண்டன் கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து தர்மராஜ் இருவரது குடும்பத்தினரிடம் பணம் கேட்டபோது, பணம் தர மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 23, 2024

தஞ்சை அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

image

அகரப்பேட்டையை சேர்ந்தவர் மோகன்தாஸ் (44). இவரது மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த இவர் நேற்று தனது சலூன் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தோகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 22, 2024

முதலமைச்சரால் நாளை தஞ்சை டைடல் பார்க் திறப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், மினி டைடல் பூங்காவினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.23) காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

News September 22, 2024

தஞ்சை அருகே தனியார் கம்பெனியில் 142 கிலோ செம்பு கம்பி திருட்டு

image

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி சுற்றி பல தனியார் கம்பெனியில் உள்ளன. அந்தப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் செம்பு கம்பிகளை மர்ம நபர் திருடி சென்று விட்டனர். புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது செங்கிப்பட்டி சேர்ந்த கெர்சோன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் 142 கிலோ செம்பு கம்பி மற்றும் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News September 22, 2024

தஞ்சை: முன்னாள் அமைச்சர் மீது போலீசார் வழக்குப்பதிவு

image

சென்னையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்க முறைகேடாக ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம், அவரது இரு மகன்கள் உள்பட 11 போ் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.