India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டையைச் சேர்ந்த அம்மாகண்ணு என்பவருக்கு திருவோணத்தில் சொந்தமாக நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து வேறு ஒருவருக்கு பத்திர பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருவோணம் போலீசார் ஒரத்தநாடு முன்னாள் துணைதாசிலர் பைரோஸ்பேகம், விஓ பாண்டியன், சார்பதிவாளர் கலாநிதி, பதிவாளர் தங்கசாமி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் திமுக கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சைக்கு இன்று வருகை தந்த போது, தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் சிறப்பான வரவேற்பை தந்த, திமுக கழக உடன்பிறப்புகள் இளைஞரணி தம்பிமார்கள் பொதுமக்கள் அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என சமூக வலைதளத்திதில் தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் திமுக கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சைக்கு இன்று வருகை தந்த போது, தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் சிறப்பான வரவேற்பை தந்த, திமுக கழக உடன்பிறப்புகள் இளைஞரணி தம்பிமார்கள் பொதுமக்கள் அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என சமூக வலைதளத்திதில் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுடன் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. உதவி ஆட்சியர் பயிற்சி உத்காஷ் குமார் அருகில் உள்ளார்.
கோணியக்குறிச்சி பகுதியை சேர்ந்த வினோதகன், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அதே ஊரை சேர்ந்த ரமேஷ், சந்திரசேகரன், சேகர், ராஜா ஆகியோர் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரத்தநாடு கே திருவோணம் காவல் சரகத்திற்கு உட்பட்ட தோப்பு நாயம் கிராமத்தில் கண்ணன் என்பவர் கூரை வீட்டில் வீட்டில் ரூ.75,000 பணம் வைத்து சூதாடிய ஐந்து நபரை திருவோணம் சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அமேலும் அவர்களிடம் 75 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். காவல் துறையின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது கொலை, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு கரந்தை புற்றுமாரியம்மன் கோயில் அருகே அறிவழகன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பின்னர் உடலை கைப்பற்றி கிழக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் 36 நாட்கள் உள்ள நிலையில் பட்டுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 41 பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். போதுமான மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள்,
தீத்தடுப்பான்கள் வைக்கப்பட்டுள்ளதா? அவசர காலத்தில் வெளியேற கூடிய அவசர வழி உள்ளதா? உள்ளிட்ட 18 விதிமுறைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகிற செப்.27-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சித்தலைவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் (ம) புகாரை தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சாகுபடி பணிகளுக்காக, தூத்துக்குடியில் இருந்து 1,250 டன் யூரியா, காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி, சூப்பர் உரம் ஆகியவை 21 வேகன்களில் தஞ்சைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் உரை மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.