India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் அண்ணா சிலை பகுதி வீட்டில் தனியாக வசித்து வருபவர் செல்லத்துரை மனைவி ராசாத்தி (70). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது திடீரென காஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் படுகாயமடைந்த ராசாத்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தஞ்சை தாலுகா காவல் நிலையத்திற்கு நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார். அதில் தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் குரு பரிகார தல மாக விளங்குகிறது. இக்கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிதியை தவறான வழியில் செலவு செய்த கோவில் செயல் அலுவலர் அதை கண்காணிக்க தவறிய இணை ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவனேசனை ஆதரித்து தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. பஸ் கட்டணம், பால் கட்டணம், பெட்ரோல், டீசல், தங்கம். அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்.
கும்பகோணம் அடுத்த ஆடுதுறை- ஆவணியாபுரம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மற்றும் தரங்கம்பாடி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் நாளை (ஏப்ரல்10) காலை 8: 30 மணி முதல் மாலை 6: 00 மணி வரை நடைபெற இருப்பதால் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். ஆகவே, ஆடுதுறையிலிருந்து ஆவணியாபுரம் மற்றும் தரங்கம்பாடி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் செல்லவும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க தஞ்சாவூர் மாவட்ட எல்லையான செ.புதூரில் இருந்து காஞ்சிவாய் வரை 25 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆடு, கோழி, பன்றிகளை உள்ளே அடைத்து 5 கூண்டுகளையும் ஆங்காங்கே வைத்துள்ளோம் என கும்பகோணம் வனச் சரக அலுவலர் தெரிவித்துள்ளார். சிறுத்தை தொடர்பான வதந்திகளையோ செய்திகளையோ பரப்ப வேண்டாம் என்று அவர் கூறினார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 % நேர்மையாக வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ராட்சத விழிப்புணர்வு பலூன் இன்று பறக்க விடப்பட்டது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பறக்க விட்டார். இந்நிகழ்ச்சிகள் பயிற்சி கலெக்டர் விஷ்ணு பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மதியழகன் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் உலாவி வந்த சிறுத்தை, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடம்பெயரவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை பகுதிக்கு சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் வனத்துறை விளக்களித்துள்ளது. வதந்திகளை பரப்பி மக்களை அச்சப்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தல். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா எனவும் சோதனை நடைபெறுவதாக தகவல்.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. தினந்தோறும் நாடியம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் காலையும், மாலையும் வீதி வலம் வந்தது. அந்த வகையில் நேற்று(ஏப்,8) அதிகாலை 4.30 மணி அளவில் செட்டியார் தெருவை அடைந்த நாடியம்மனுக்கு பதுமைகள் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.பாபு கும்பகோணம் மேற்கு ஒன்றியம் பகுதியில் நேற்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கடை வீதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேட்பாளர் பி.பாபு தானே பஜ்ஜி சுட்டுக்கொடுத்து கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
Sorry, no posts matched your criteria.