India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் சீதாலட்சுமண அனுமன் கோதண்ட ராமசாமி கோவிலில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இவ்விழாவில் சீதா லட்சுமணன் அனுமன் சமேத ராமர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஹே ராம் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சையைச் சேர்ந்தவர் கிருபா பொன்.பாண்டியன். இவர் காரில் திருச்சிக்கு சென்று விட்டு நேற்று காலை தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வல்லம் அருகே வரும் போது கட்டுப்பாடை இழந்த கார், மினி லாரி மீது மோதி விபத்து ஏற்ப்பட்டது. இதில் கிருபா பொன் பாண்டியன் சம்பவயிடத்திலேயும், மினி லாரி ஓட்டுநர் நெடுஞ்செழியன் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பூதலூர் அருகே வில்வராயன்பட்டியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை டாட்டா ஏசி வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அயனாவரத்தில் இருந்து பூதலூர் வரும் வழியில் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் உள்ள வாய்காலில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் வாக்கு நிறைவு நாளான நேற்று(16/04/2024) வாக்கு போடப்பட்டதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வரும் நாடாளுமன்ற (2024) தேர்தலை முன்னிட்டு கும்பகோணம் வட்டம் மற்றும் நகரம் மகாமக குளக்கரையில் 100% வாக்களிப்பதை உறுதி செய்வது தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் இன்று தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு வரும்
மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் உடனடியாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார். ஏதேனும் குறைகள் இருந்தால் Saksham–Eci செயலி மற்றும் 1950 வழியாக பதிவு செய்து தீர்வு பெறலாம் என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (16.04.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மற்றும் பலர் உள்ளனர்.
தஞ்சாவூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பொன் பாண்டியன்(34). ஆசிரியரான இவர், காரில் திருச்சி சென்றுவிட்டு, இன்று தஞ்சை வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இதில் பொன் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, மினிலாரி ஓட்டுநர் நெடுஞ்செழியனும்(32) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வல்லம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி பழநியாண்டவர் வழிபாட்டுச் சங்கத்தின் மூலமாக கடந்த இரு மாதங்களாக கோயில் வளாகத்தில் திருப்புகழ் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முருக பக்தர்கள் திருப்புகழை பயில ஏதுவாக 150 திருப்புகழ் பாடல்களை தொகுத்து ” இருப்பவல் திருப்புகழ்”என்ற நூலை தயாரித்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் முருக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.