India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் இன்று(ஏப்.20) காலை தொடங்கி மேல வீதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, மின் கம்பங்களில் தேரின் அலங்கார துணிகள் சிக்கி தாமதமாகி தேர் செல்வதில் தாமதமானது. இதையடுத்து தேரில் செய்யப்பட்டு இருந்த அலங்கார துணிகள் மற்றும் சவுக்கு கட்டைகள் அறுத்து அகற்றப்பட்டன. இதையடுத்து தேர் புறப்பட்டு சென்றது. இதனால் தேர் மேல வீதியை கடந்து செல்வதற்கே வெகு நேரம் ஆனது.
மக்களவைத் தேர்தலையொட்டி, தஞ்சை மாவட்டம் காவிரி கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் நேற்று(ஏப்.19) தங்களது ஓட்டுகளை பதிவு செய்வதற்காக வாகனங்களில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். காவிரி படுகை கிராமத்தில் இருந்து திருகாட்டுப்பள்ளி வந்து, பின்னர் திருவையாறு சாலையில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று(ஏப்.19) இரவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இதனை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு எஸ்பி தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் இருந்தனர்.
தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. தேர் காலை 7 மணி முதல் 7.20 மணிக்குள் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி தஞ்சை மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜவீதி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோவில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைதெரு , நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை ரோடு, சிரஸ் சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (20-ந்தேதி) காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடக்கும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டி போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன்படி, ஏப்.15ம் தேதி முதல் நேற்று(ஏப்.17) வரை நடந்த சோதனையில் 2,661 மது பாட்டில்கள், 4 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.