Thanjavur

News July 20, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் ஜூலை 24ஆம் தேதி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளதால், மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News July 20, 2024

பட்டுக்கோட்டை ரயில்வே திட்டங்கள் குறித்து எம்பி ஆய்வு

image

தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை ரயில்வே திட்டங்கள் குறித்து தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள் நேற்று DRM உடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை அவர்கள் ரயில் பயன்பாட்டாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News July 19, 2024

தஞ்சாவூரில் நடமாடும் புத்தகத் திருவிழா பேருந்து

image

தஞ்சாவூர் அரண்மனை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடமாடும் புத்தகத் திருவிழா பேருந்தினை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில், தஞ்சாவூர் எம்பி முரசொலி சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் பேருந்தினை கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார்கள். இதில் மேயர்கள் ராமநாதன், சரவணன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி கோட்டாட்சியர் இலக்கியா, மாநகராட்சி ஆணையர் உட்பட பலர் உள்ளனர்.

News July 19, 2024

BREAKING: தஞ்சையில் 3 பேர் பலி

image

தஞ்சையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கீழ குறிச்சியில் நடந்த இந்த விபத்தில், தாய், மகள் மற்றும் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாயும், மகளும் பேருந்தை கடக்க முயன்றபோது, பைக்கில் வந்த இளைஞர் மீது மோதி இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

தஞ்சை: அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலமாக மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைஞர் வேளாண் தொழில் முனைவோர் மானிய திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் எனவும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்ற 30 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் என்று தஞ்சை வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

தஞ்சையில் நாளை முதல் புத்தகத் திருவிழா ஆரம்பம்

image

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நாளை 19ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. நாளை துவங்கும் புத்தக திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பேருரை ஆற்றுகிறார். இவ்விழாவில் நாடாளுமன்ற, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

தஞ்சாவூர்: மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி

image

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று 45 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதுபோல மேட்டூர் அணையிலிருந்து, கல்லணைக்கு சுமார் 21,520 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து பாசனத்திற்காக 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!