India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நேற்று(ஜூலை 22) பிரியங்கா IAS பொறுப்பேற்றுக்கொண்டார். தஞ்சையில் 2 ஆவதாக பணியமர்த்தப்பட்ட பெண் ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 1984 ஆம் ஆண்டு(40 ஆண்டுகளுக்கு முன்பு) ஓ.பி.சோசம்மாள் என்பவர் தஞ்சை கலெக்டராக பணியாற்றினார். விவசாயத்திற்கும், கிராமப்புற மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என ஆட்சியர் பிரியங்கா உறுதியளித்துள்ளார்.
தஞ்சை மார்க்கெட்டில் இன்று காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டது. கேரட் கிலோ ரூ.100-யை எட்டியது. தக்காளி கிலோ ரூ.64, உருளைக்கிழங்கு கிலோ ரூ.48,கத்தரிக்காய் கிலோ ரூ. 50, வெண்டைக்காய் கிலோ ரூ.34, அவரைக்காய் ஒரு கிலோ ரூ.80, புடலங்காய் கிலோ ரூ.42, பாகற்காய் கிலோ ரூ.70 முதல் 96 ரூபாய் முருங்கைக்காய் கிலோ ரூ.76 பீர்க்கங்காய் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூலை 22) ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள கரம்பயம் மற்றும் கும்பகோணம் அருகே சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(ஜூலை 23) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம் & கும்பகோணம் நகரம் தவிர உமா மகேஸ்வரபுரம், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், அரிய திடல், விசலூர், நாச்சியார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி – மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஜூலை 26 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ‘Jio-Rilance’ நிறுவனம் பல்வேறு பணியிடங்களுக்கு 4,000க்கும் அதிகமானோரை தேர்வு செய்யவுள்ளனர். 10 & 12ஆம் வகுப்பு முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பட்டதாரிகள் பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்; கூடுதல் விவரங்களுக்கு 04362 – 237037. தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணலாமே!
அண்மையில் தமிழக அரசு 10 மாவட்ட ஆட்சியர்களை இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்சியாக இருந்த தீபக் ஜேக்கப் மாற்றப்பட்டு ப்ரியங்கா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரியங்கா ஐஏஎஸ் தஞ்சாவூர் மாவட்ட புதிய ஆட்சியராக இன்று(ஜூலை 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கும்பகோணம் அருகே கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது பிரசித்தப்பெற்ற சூரியனார் கோயில். ஞாயிற்றுக் கிழமையையான நேற்று(ஜூலை 21) இக்கோயிலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்றைய வெப்ப நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழநாட்டில் அதிகபட்சமாக தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் தலா 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக மதுரை விமான நிலையம் 102, காரைக்காலில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுமையான வெப்பத்தால் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கும்பகோணம் அடுத்த திருநறையூர் சித்தநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.1கோடி மதிப்புள்ள 18 ஏக்கர் தரிசு நிலத்தை அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். இதையறிந்த கும்பகோணம் அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா,தாசில்தார் செந்தில் மற்றும் செயல் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நிலத்தை மீட்டு முள்வேலி அமைத்து, எச்சரிக்கை பலகை வைத்தனர். தஞ்சையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு சம்பவத்தை கண்டிக்குமா அரசு?
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் தீபக் ஜேக்கப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.