Thanjavur

News August 9, 2024

தஞ்சையில் கிடுகிடுவென உயர்வு

image

தஞ்சையில் ஆடி வெள்ளியை அடுத்து பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிலோ ரூ.500க்கு விற்கப்படுகிறது. இதேபோல் முல்லை ரூ.500, ஆப்பிள்ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.120, சம்மங்கி ரூ.200, மரிக்கொழுந்து கட்டு ரூ.50, செண்டி பூ ரூ.30, அரளி ரூ.200, செவ்வந்தி ரூ.200 விற்பனை செய்யப்படுகிறது.

News August 9, 2024

தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

image

தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிவகங்கை பூங்காவை, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் டிகேஜி நீலமேகம் எம்எல்ஏ துரை சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி எம்பி, மாவட்ட ஆட்சியர், மேயர், துணை மேயர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதை ஷேர் செய்யவும்

News August 8, 2024

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2024

பாபநாசத்தில் 29 மி.மீ, மழை பதிவு

image

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பாபநாசம் 29 மி.மீ, மழை பெய்துள்ளது. மேலும் தஞ்சாவூரில் 5 மி.மீ, குருங்குளம் 16.40 மி.மீ, வெட்டிக்காடு 18.60 மி.மீ, கும்பகோணம் 11.00 மி.மீ, அய்யம்பேட்டை 26 மி.மீ, திருவிடைமருதூர் 4.00 மி.மீ, அதிராம்பட்டினம் 5.20 மி.மீ என மாவட்டம் முழுவதும் சராசரியாக 160.10 மி.மீ அளவிற்கு மழையளவு பதிவாகியுள்ளது.

News August 8, 2024

ரூ.4 கோடி 37 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் ரூ 4 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் ஆரியப்படை வீடு, ஊராட்சி அங்கன்வாடி மற்றும் புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மேலும் தஞ்சையில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

News August 7, 2024

வல்லத்தில் 76 மிலிமீட்டர் மழை பொழிவு

image

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம் கல்லணையில் 13.6 மிலிமீட்டரும் திருக்காட்டுப்பள்ளியில் 24 மிலிமீட்டரும், திருவையாறில் 17 மிலிமீட்டரும், தஞ்சாவூரில் 29 மிலிமீட்டரும், பாபநாசத்தில் 8 மிலிமீட்டரும், கும்பகோணத்தில் 2 மிலிமீட்டரும், பூதலூரில் 42.4 மிலிமீட்டரும், வல்லத்தில் 76 மிலிமீட்டரும், வெட்டிக்காடு பகுதியில் 86.6 மிலிமீட்டரும் மழை பெய்துள்ளது.

News August 7, 2024

பகுதி நேர கிராமிய கலை பயிற்சிக்கு அழைப்பு

image

தமிழக அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சி வகுப்புகளுக்கு 2024 – 2025ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் கரகாட்டம், பொய்க்கால்குதிரை, நையாண்டி மேளம், நாதஸ்வரம் ஆகிய கலைகளுக்கு பயிற்சி வகுப்புகள் மண்டல கலை பண்பாட்டு மையத்தில் வாரத்தில் 2 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்று ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் நேற்று தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News August 6, 2024

தஞ்சையில் 3 லட்சம் மானியம்; ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைப்பதற்கு நிதி உதவி செய்கிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு இயந்திரங்கள்,மூலப்பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு 3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் இன்று  தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

தஞ்சையில் மழை பெய்ய வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 6, 2024

பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது

image

அய்யம்பேட்டை சேர்ந்த ஹக்கீம் என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி அதில் முதலீடு செய்தால் பங்குத்தொகை தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 1 லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்தனர். ஆனால் கூறியது போல அவர்களுக்கு பங்குத்தொகை வழங்காததால், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஹக்கீமை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!