Thanjavur

News August 10, 2024

தஞ்சைமாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

சுற்றுலா தொழில் முனைவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான சுற்றுலா விருது வழங்குவதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து வரும் 20ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்புமாறு தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று(ஆக.10) இரவு 7 மணி வரை தஞ்சாவூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 10, 2024

மகப்பேறு இறப்பு பயிலரங்கம்

image

தஞ்சாவூர் இராசாமிராசுதார் மருத்துவமனையில் மருத்துவம்,மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு விடுபட்ட முக்கிய தொகுப்புகளை ஒன்றினைக்கும் பயிலரங்கம் நடைபெற்றது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த அரசு மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான பயிற்ச்சி அளிக்கப்பட்டது.

News August 10, 2024

தஞ்சையில் ஐம்பொன் சிலை மீட்பு: 7 பேர் கைது

image

தஞ்சை அருகே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 8 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 2.5 அடி உயரமுள்ள ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்தனர். மேலும் தினேஷ், ராஜேந்திரன்,ஜெய்சங்கர், ராஜ்குமார், ஹாரிஸ், அஜித்குமார், விஜய் ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். இது 16ஆம் நூற்றாண்டு சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

News August 9, 2024

முள்ளங்குடி ஊராட்சி தலைவருக்கு தேசிய விருது

image

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சிக்கு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது மந்திரி எஸ்.பி. சிங் பாகல் வழங்கினார்.

News August 9, 2024

பூதலூரில் 18.2 மிலி மீட்டர் மழைப்பொழிவு

image

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழையின் விவரம், திருவையாறில் 15 மிலி மீட்டரும், தஞ்சாவூரில் 12.5 மிலி மீட்டரும், பாபநாசத்தில் 63 மிலி மீட்டரும், கும்பகோணத்தில் 19 மிலி மீட்டரும், பூதலூரில் 18.2 மிலி மீட்டரும், வல்லத்தில் 7 மிலி மீட்டரும், வெட்டிக்காடு பகுதியில் 28 மிலி மீட்டரும், பேராவூரணியில் 4.4 மிலி மீட்டரும், நாகுடியில் 15.6 மிலி மீட்டரும் மழை பெய்துள்ளது.

News August 9, 2024

தஞ்சை எஸ்.பி. பதவி உயர்வு

image

தமிழ்நாட்டில் தஞ்சை, கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் 24 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி-ஆக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தஞ்சை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயச்சந்திரன் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

News August 9, 2024

தஞ்சையில் நிகழ்ந்த நெகிழ்ச்சி செயல்

image

மணல்மேல்குடியை சேர்ந்த தொழிலாளி, கோவையில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மூளைச்சாவடைந்தார். இதனையடுத்து அவரது கிட்னி, கண்கள், கல்லீரல், தோல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு 7 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர். தானம் செய்த தொழிலாளியின் உடலுக்கு வருவாய் அதிகாரி தியாகராஜன் அரசு மரியாதை செலுத்தினார். கருத்துகளை பதிவிடவும்

News August 9, 2024

கல்லணையில் 8,013 கன அடி தண்ணீர் திறப்பு

image

கல்லணையில் இன்று காலை நிலவரப்படி காவிரியில் 3,254 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 3,259 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 1,500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 8,013 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும் தண்ணீர் திறக்கும் அளவானது நேற்றை விட 7000 கனஅடி குறைவாகும். இதனால் விவசாயிகள் கடும் சோகத்தில் உள்ளனர்.

News August 9, 2024

தஞ்சையில் நாளை சிறப்பு முகாம்

image

தஞ்சை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தஞ்சை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. எனவே பொதுமக்களின் வசதிக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நாளை ஓட்டுநர் உரிமம் வழங்கல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளமாறு கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!