India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மருத்துவகல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கூறுகையில், “மாவட்டத்திலுள்ள சுகாதார களப்பணியாளர்கள் மற்றும் 77 ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மூலம் நீரிழிவு நோயாளிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 1,75,000 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 3,000 பேருக்கு காலில் புண் ஏற்படுவதற்கான அறிகுறிகளும், 2,500 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையும் உள்ளது” என தெரிவித்தார்.
திருவாரூரை சேர்ந்த ராமையன் (60), ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது மின்சார வாரிய ஊழியர்கள் மரத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தனர். அதனால் அங்கு அவிழ்ந்து கிடந்த மின் கம்பி இருசக்கர வாகனத்தில் சிக்கி ராமையன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் சந்தன மாலை தயாரிப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் சந்தன மாலைகள் கைவினைப் கலைஞர்களால் நுணுக்கமான கலை படைப்புக்களுடன் மாலை உருவாக்கம் செய்யப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாலை தயாரிப்பு குறித்து நடைபெற்ற பயிற்சி முகாமில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
திருவையாறு 33 கிலோ வாட் துணை மின்நிலையம் (ம) மேலத்திருப்பந்துருத்தியில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின் நிலையங்களுக்குட்பட்ட திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் உள்ளிட்ட பகுதியில் இன்று(15.6.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில், சுற்றுலாத் துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலாத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து சுற்றுலா குழும உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் – திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கும்பகோணம் அர்பன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(ஜூன்15) சனிக்கிழமை நடைபெறுவதால் இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் கும்பகோணம் நகர், கொரநாட்டு கருப்பூர், செட்டி மண்டபம், மேலக் காவேரி பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு கும்பகோணம் உதவி பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வடசேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 9: 00 மணி முதல் மாலை 5 மணி வரை வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தனிக்கோட்டை , கருப்பூர் ,புலவஞ்சி , கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, வளையக்காடு ,மகா தேவபுரம் , கண்ணுக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
ஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் காவலர்களுக்கு பணி நிமித்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் ஒருவரை தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்ததை அடுத்து விசாரணை செய்து ஒரு பெண் காவலரை ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கும், மற்றொரு பெண் காவலரை திருவோணம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவின்றி சிகிச்சை பெற்ற நோயாளிகள் இறந்த பின்னரும், அவர்களது உடலை உரிமை கோர யாரும் வராத நிலையில் அவை பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 26 உடல்களையும் நேற்று(ஜூன் 11) ராஜகோரி மயானத்தில் காவல்துறை, அரசு மருத்துவக் மருத்துவமனை நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மின்வாரிய உதவி பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(ஜீன் 12) ஈச்சங்கோட்டை, மருங்குளம், நடுவூர், சூரியம்பட்டி, வேங்குராயன்குடிகாடு, வடக்கூர், கொல்லங்கரை, சாமிப்பட்டி, பாச்சூர், துறையூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.