Thanjavur

News August 19, 2024

சுவாச கருவி வழங்கிய கலெக்டர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தஞ்சாவூர் ஒன்றியம் விளார் பகுதியினை சேர்ந்த துளசி என்பவர் தனக்கு சுவாச கருவி வேண்டி விண்ணப்பத்தை தொடர்ந்து அவரது தாயார் ஞானவள்ளியிடம் சுவாச கருவியினை வழங்கினார்.

News August 19, 2024

தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

image

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவிப்பின்படி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சந்திரசேகர மூப்பனார் தஞ்சை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ,‌ மாநகர, வட்டார, சார்பு அணி, பேரூர் நிர்வாகிகள் பட்டியலை இன்று கும்பகோணம் மூப்பனார் பங்களா அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது மாநில உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ராஜாங்கம், தஞ்சை கிழக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.சங்கர் உடன் இருந்தனர்.

News August 19, 2024

தஞ்சை ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

image

கடந்த 2018-ஆம் ஆண்டு கும்பகோணம் கோயில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் , இதுவரை குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவை மதிக்காத மாவட்ட நிர்வாகத்தை கடுமையாக சாடியதோடு, வரும் ஆக.28-ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

News August 19, 2024

432 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 432 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கினர்.

News August 19, 2024

கூட்டுப்பாலியல் வன்கொடுமை – எஸ்.ஐ. சஸ்பெண்ட்

image

தஞ்சை பாப்பநாட்டில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பெண் எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இளம்பெண்ணின் புகாரை ஏற்காமல் அலட்சியப்படுத்தியதால் பெண் எஸ்.ஐ. சூர்யாவை சஸ்பெண்ட் செய்து டிஜிபி ஆணையிட்டுள்ளார். எஸ்.ஐ. சூர்யா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 19, 2024

காதல் ஜோடியை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த 4 பேர் கைது

image

தஞ்சையை சேர்ந்த தமிழரசன்(24) என்பவர், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை -திருவையாறு புறவழி சாலையில் சென்றுள்ளார். அப்போது, தமிழரசன் மற்றும் அவரது காதலியை வழிமறித்த 4 நபர்கள், அவர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் ரூ.3,000 பறித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கள்ளப் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபு, மணிகண்டன், சார்லஸ், வல்லரசன் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

News August 19, 2024

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

image

பட்டுக்கோட்டை அடுத்த நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரத்தநாடு அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

News August 19, 2024

மாட்டு இறைச்சி கடைகளுக்கு ரூ.1000 அபராதம்

image

பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் அண்ணா குடியிருப்பு பகுதியில் உள்ள 5 மாட்டு இறைச்சி கடைகளை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது உரிமம் இல்லாமலும் மாட்டு இறைச்சி கழிவுகள் 1900 கிலோ திறந்த நிலையில் தொற்று நோய் ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர், தரமற்ற மாட்டிறைச்சி விற்ற கடைகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

News August 18, 2024

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் வெளியே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. SHARE NOW!

News August 18, 2024

ரூ.9.86 கோடி வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

image

தஞ்சை அரண்மனை வளாக தார்பார் கூடத்தில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மேலும், பணிகள் முன்னேற்றம் குறித்தும், ரூபாய் 3.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்தும், இராச இராசன் மணிமண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் நேற்று கலெக்டர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, இன்று பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!