India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சிறப்புத் திட்ட முகாமில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.75,000 மதிப்பில், குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனத்தை 3 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று வழங்கினார்.
தஞ்சையில் ஆவணி மாதத்தின் தொடர் முகூர்த்தம் மற்றும் வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை ஆன மல்லிகை இன்று 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 1,000 ரூபாய்க்கும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 300 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாய்க்கும், ஆப்பிள் ரோஸ் கிலோ 150 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பேராவூரணி அடுத்த ரெட்டவயல் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் இன்று அதிகாலை வீடு திரும்பிய தஞ்சை ஆயுதப்படை பெண் காவலர் சுபப்ரியா மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
தஞ்சை உழவர் சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.36 வெண்டைக்காய் கிலோ ரூ.26, அவரைக்காய் கிலோ ரூ.54, முருங்கைக்காய் கிலோ ரூ.30, பல்லாரி கிலோ ரூ.48, சின்ன வெங்காயம் கிலோ ரூ.46, தக்காளி கிலோ ரூ.22 உருளைக்கிழங்கு கிலோ ரூ.46, சேனைக்கிழங்கு கிலோ ரூ.90, பச்சை மிளகாய் கிலோ ரூ.56, இஞ்சி கிலோ ரூ.150, கருவேப்பிலை ஒரு கட்டு ரூ.40, காலிபிளவர் கிலோ ரூ.40 என விற்பனை செய்யப்படுகிறது.
பேராவூரணி அடுத்த பெருமகளூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சரோஜா(70). இவரின் மகன்கள் சென்னையில் வேலை பார்த்து வருவதால் ஒப்பந்தக்காரர் மூலம் வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. சம்பவத்தன்று 2 பேர் புது வீட்டுக்கு கம்பி கட்டும் வேலைக்கு வந்ததாக கூறி வீட்டிற்குள் சென்றவர்கள், துணியால் சரோஜாவின் வாயை மூடி, 9 பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து பேராவூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு படி, கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் மேற்பார்வையில், கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையிலான காவலர்கள் பட்டீஸ்வரம் காவல் நிலைய சரகம் சேஷம்பாடி பகுதியில் எவ்வித அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, ஒரு ஜேசிபியை பறிமுதல் செய்தனர்.
உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவிடைமருதூர் ஊராட்சி, திருவாய்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் நேற்று ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.
திருவிடைமருதூர் அருகே மணலூர் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் படி துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜேசிபி டிராக்டர் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு 8 பேரை செய்தனர்.
திருவிடைமருதூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பனந்தாள் முதல் நிலை பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பயிற்சி கலெக்டர், கோட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் உதவி ஆட்சியர் உத்கர்ஷ் குமார், கோட்டாட்சியர் பூர்ணிமா உள்ளிட்டோர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.