Thanjavur

News March 7, 2026

தஞ்சையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

பிரதமர் மோடி பங்கேற்கும் திருச்சி பொதுக்கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 06) தஞ்சையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்குப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மேலும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

News March 7, 2026

தஞ்சாவூர்: 34 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி!

image

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில், சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதிநேர வேலை என ஆசை காட்டி 34 பேரிடம் சுமார் ரூ.1.50 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் ஆசிரியர்கள், விவசாயிகள், தனியார் ஊழியர்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரை அடுத்து, தஞ்சாவூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் 34 வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்!

image

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் உயர்மட்ட‌ பாலம் கட்டும் பணிகள்‌ நடைபெற‌ உள்ளதால், வரும் மார்ச் 9-ம் தேதி முதல், கும்பகோணம் – திருவையாறில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கீழவாசல் வழியாக செல்ல வேண்டும். இதேபோல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மேலவீதி, பழைய திருவையாறு சாலை வழியாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 7, 2026

தஞ்சை: விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கரும்பு அரவை நடைபெற்று வருகிறது. நடப்பு அரவைப்பருவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பரப்பிலிருந்து 1,45,000 மெ.டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டு 4-ம் தேதி வரை 1,11,368 மெ.டன்கள் அரவை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை அரவை 12-ம் தேதி நிறைவு செய்ய உள்ளதால் ஆலைக்கு பதிவு செய்து, விவசாயிகள் கரும்புகளை விரைந்து அனுப்ப ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.6) இரவு 10 முதல் நாளை (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 6, 2026

பொதுமக்கள் விழிப்புணர்வு முகாம் – ஆட்சியர் தகவல்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பதிவுத்துறையில் நடைமுறைப்படுத்தியுள்ள ஸ்டார் (STAR) 3.0 திட்டத்தின்‌ மூலம் ஆவணங்கள் பதிவேற்றம் செய்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு முகாம் வரும் 7-ம் தேதி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய நில ஆவணங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

பால் உற்பத்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்‌ ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 440 சங்கங்கள் உள்ளன. சங்கங்களுக்கு பால் உற்பத்தி செய்து வழங்கும் உற்பத்தியாளருக்கு பல்வேறு ஊக்கத்தொகை சிறப்பு தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

தஞ்சை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் செய்து,<<>> Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 6, 2026

தஞ்சை: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 6, 2026

தஞ்சை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் mylpg என்று<> இணையத்தளத்தில் <<>>சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!