Thanjavur

News September 12, 2024

கூட்டு பாலியல் வழக்கில் மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

image

பாபாநாட்டில் கடந்த மாதம் 12ஆம் தேதி இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு இளைஞர்கள் – இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் உத்தரவின்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாசன், பிரவீன், திவாகர் ஆகியோர் மீது ஆகிய மூன்று பேர் மீது குண்டர் பாய்ந்தது. உங்கள் கருத்துகளை COMMENT-ல் பதிவிடவும்.

News September 12, 2024

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் அழைப்பு

image

பொது விநியோக திட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய புகார்களை அந்தந்த வட்டத்தில் வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

தஞ்சாவூரில் நாளை பணியாளா் குறைதீா் கூட்டம்

image

தஞ்சாவூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல அலுவலகத்தில் பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோரின் குறைகளை தீா்வு காணும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளா்களின் குறைகள் தீா்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தஞ்சாவூா் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் பலி

image

சிதம்பரம் அருகே விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டது. இதில் காரும் லாரியம் நேருக்கு நேர் மோதியதில் கும்பகோணம் கருப்பூரை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் யாசர் அரஃபாத், முகமது அன்வர், ஹாஜிதா பேகம், ஸரபாத் நிஷா, அப்னான் என ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் மரணம் அடைந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

News September 12, 2024

திமுக முன்னாள் கவுன்சிலர் நினைவு கொடியேற்றல் நிகழ்ச்சி

image

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் கவுன்சிலர் சுபா திருநாவுக்கரசு நினைவு கொடியேற்று நிகழ்ச்சி இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், தமிழக சட்டமன்ற தலைமை கொறடா கோவி. செழியன் திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்கள் மற்றும் தி மு க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

News September 12, 2024

தஞ்சை அருகே 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

image

தஞ்சையில் கடனுதவி பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் நேற்று ஆய்வு செய்தாா். தஞ்சாவூா் அருகே மணக்கரம்பையில் 2 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்பப் பூங்கா மூலம் 300க்கும் அதிகமான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News September 12, 2024

கும்பகோணத்தில் 790 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகள் தொடர் விடுமுறை, முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் கோட்டத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 790 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

ஒரத்தநாடு அருகே ஆற்றில் மிதந்த இரண்டு உடல்கள்

image

ஒரத்தநாடு அடுத்துள்ள மேல உளூர் கிராமத்தில் உள்ள கல்யாண ஓடை வாய்க்காலில் சுமார் 40 வயது பெண் ஒருவரின் உடல் நேற்று மிதந்து வந்துள்ளது. அதேபோல் பருத்திக்கோட்டை கிளை வாய்க்காலில் 25 மதிக்கத்தக்க இளைஞரின் உடலும் கரை ஒதுங்கியுள்ளது. இருவரின் உடலையும் மீட்ட வருவாய் துறையினர் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் குறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 12, 2024

திருட்டு வழக்கில் 5 மாதத்திற்கு பிறகு குற்றவாளிகள் கைது

image

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் வீட்டில் கடந்த 24.05.2024ஆம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 5 லட்சம் மதிப்புடைய தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சூரக்கோட்டை பாலமுருகன் மற்றும் கபினேஷ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.

News September 11, 2024

தஞ்சாவூரில் கலெக்டர் ஆய்வு

image

தஞ்சை மாவட்ட தொழில் மையம் சார்பில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடன் உதவி பெற்று செயல்பட்டு வரும் கரந்தட்டான்குடி ஸ்ரீ வேலன் டைல்ஸ் நிறுவனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் இன்று (செப்.11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிவண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!