India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், மினி டைடல் பூங்காவினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.23) காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி சுற்றி பல தனியார் கம்பெனியில் உள்ளன. அந்தப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் செம்பு கம்பிகளை மர்ம நபர் திருடி சென்று விட்டனர். புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது செங்கிப்பட்டி சேர்ந்த கெர்சோன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் 142 கிலோ செம்பு கம்பி மற்றும் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்க முறைகேடாக ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம், அவரது இரு மகன்கள் உள்பட 11 போ் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு ஏறத்தாழ 36,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது தமிழக அரசு,
இதுவரை முஸ்லிம்களுக்கான அந்த 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா என்கின்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களால் நிரப்பப் படவேண்டிய பணியிடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து அவற்றில் முஸ்லிம்களை நிரப்பிட வழி வகுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்தார்.
சென்னையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்க முறைகேடாக ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம், அவரது இரு மகன்கள் உள்பட 11 போ் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
பாஜக மாநில பொது செயலாளர் முருகானந்தம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்னையில் சந்தித்து பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தினார். அதில் தஞ்சாவூரில் UDAN திட்டத்தின் கீழ் விமான நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும, தஞ்சாவூரில் இருந்து பெங்களூர், சென்னைக்கு வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
கும்பகோணம் ஐடி நிறுவன ஊழியருக்கு இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என மர்ம நபர் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதை நம்பிய ஊழியா் மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு முதலில் சிறு தொகை கிடைத்ததை நம்பிய பல்வேறு தவணைகளில் ரூ.29.70 லட்சம் அனுப்பியுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ஊழியா் சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சையில் நடைபெரும் விநாடி விநா நிகழ்ச் மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு திமுக கழகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இன்று தஞ்சைக்கு வருகை தந்துள்ளார். அவரை மரியாதை நிமித்தமாக தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், சங்கம் ஓட்டலில் வரவேற்றனர்.
சீனிவாசபுரம் அடுத்த செவ்வப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்த ராஜா வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். இவர் வீட்டில் வளர்க்கும் நாயைக் குளிப்பாட்டுவதற்காக தனது மகன் ராகுல், மகள் லாவண்யாவுடன் கல்லணை கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நீரில் அடித்து செல்லப்பட்ட மகனையும், நாயையும் காப்பாற்ற முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கும்பகோணத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹரி என்ற நபர் தனியார் பேருந்தில் அரிவாளுடன் ஏரி நடத்துனர் மற்றும் பொதுமக்களை கொலைவெறி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஹரி என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, காவல்துறையை பாராட்டியது.
Sorry, no posts matched your criteria.