Thanjavur

News September 28, 2024

தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆறிவிப்பு

image

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்த நிறுவனம் சார்பில் ‘தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது. இதற்கான வகுப்புகள் அக்.14 முதல் தொடங்கவுள்ளது. இந்த பாடத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000 கட்டணமாக அரசு நிர்ணயத்துள்ளது. 21-40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.

News September 27, 2024

முன்னாள் படை வீரர்கள் சுயதொழில் தொடங் ஆட்சியர் அழைப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுயதொழில் தொடங்கிட ஆர்வமுள்ள முன்னாள் படைவீரர்கள் (ம) படைப்பணியின் போது உயிரிழந்த படை வீரர்களின் கைம்பெண்களுக்கு வங்கிகள் மூலம் மானியத்துடன் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வசதி செய்து தரப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 27, 2024

470 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் நாளை செப். 28 மற்றும் செப்.29 விடுமுறை நாட்கள் ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து திருச்சி கும்பகோணம் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை நாகப்பட்டினம் ஆகியவூர்களுக்கு 295 பேருந்துகளும் திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் திருப்பூர், மதுரை, காரைக்குடி ஆகிய ஊர்களுக்கு 175 பேருந்து என மொத்தம் 470 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News September 27, 2024

தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா மற்றும் கோடை சாகுபடிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 348 ரூபாய் காப்பீடு செலுத்த கடைசி நாள் 15.11.2024, உளுந்து பயிருக்கு ஏக்கர்‌ ஒன்று 90 ரூபாய் கடைசி நாள் 17.02.2025, நிலக்கடலை ஏக்கருக்கு 443 ரூபாய் கடைசி தேதி 31.01.2025, எள் ஏக்கருக்கு 215 ரூபாய் கடைசி நாள் 17.03.2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 27, 2024

பட்டுகோட்டை அருகே கதண்டு தாக்கியதில் 13 பேர் காயம்

image

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தில் இன்று‌ பிற்பகல் 13 பெண்கள் வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கதண்டுகள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை துரத்தி தாக்கியது. இதில் 13 பேரும் காயமடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News September 27, 2024

சார் பதிவாளர் – வருவாய்த்துறை அதிகாரி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு

image

புதுக்கோட்டையைச் சேர்ந்த அம்மாகண்ணு என்பவருக்கு திருவோணத்தில் சொந்தமாக நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து வேறு ஒருவருக்கு பத்திர பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருவோணம் போலீசார் ஒரத்தநாடு முன்னாள் துணைதாசிலர் பைரோஸ்பேகம், விஓ பாண்டியன், சார்பதிவாளர் கலாநிதி, பதிவாளர் தங்கசாமி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News September 27, 2024

தஞ்சை மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் உதயநிதி

image

அரசு மற்றும் திமுக கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சைக்கு இன்று வருகை தந்த போது, தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் சிறப்பான வரவேற்பை தந்த, திமுக கழக உடன்பிறப்புகள் இளைஞரணி தம்பிமார்கள் பொதுமக்கள் அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என சமூக வலைதளத்திதில் தெரிவித்துள்ளனர்.

News September 26, 2024

தஞ்சை மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் உதயநிதி

image

அரசு மற்றும் திமுக கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சைக்கு இன்று வருகை தந்த போது, தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் சிறப்பான வரவேற்பை தந்த, திமுக கழக உடன்பிறப்புகள் இளைஞரணி தம்பிமார்கள் பொதுமக்கள் அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என சமூக வலைதளத்திதில் தெரிவித்துள்ளனர்.

News September 26, 2024

தஞ்சாவூர் கலெக்டர் தலைமையில் ஆய்வுகூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுடன் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. உதவி ஆட்சியர் பயிற்சி உத்காஷ் குமார் அருகில் உள்ளார்.

News September 26, 2024

இளைஞர் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்

image

கோணியக்குறிச்சி பகுதியை சேர்ந்த வினோதகன், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அதே ஊரை சேர்ந்த ரமேஷ், சந்திரசேகரன், சேகர், ராஜா ஆகியோர் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!