India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவினை 18ஆம் தேதி வரை 24,902 பள்ளி மாணவ மாணவியர்களும், 6,010 கல்லூரி மாணவ மாணவியர்களும், 54,648 பொதுமக்களும் என 85,747 பேர் கண்டுகளித்துள்ளனர். இந்த நான்கு நாட்களில் மொத்த புத்தக விற்பனை ரூ.19,32,757 ஆகும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு, இன்று மாலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தென்காசிக்கு வருகை தந்தார். அவரை தென்காசி வாய்கால் பாலம் இசக்கி மஹால் முன்பு தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி ஜோதிடர் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர். நிகழ்வில், நகராட்சி கவுன்சிலர் ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு நெல்லை வனவிலங்கு சரணாலயம் கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைவராகவும், தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் சிவகிரி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த தாசில்தார்கள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர் ராஜாராம், பராசக்தி கல்லூரி பேராசிரியர் செல்வி உள்ளிட்ட 10 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தென்காசி மாவட்ட கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி இலத்தூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று(நவ.,19) மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக, செங்கோட்டையில் உள்ள குண்டார் அணை பகுதியில் 20 மில்லி மீட்டர் மழையும், அடவிநயினார் அணை பகுதியில் 7 மி.மீட்டர் மழையும், கருப்பா நதியில் 9 மி.மீட்டர், ராமநதியில் 12 மில்லி மீட்டர், கடனா அணையில் 5 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்காசி உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT.
கனமழை எதிரொலியாக தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(நவ.,20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; சமூக வலைத்தளத்தில் அதிகப்படியான லைக், ஷேர் மற்றும் பின்தொடர்வோரை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல், பிறர் மனதை காயப்படுத்தும் விதமான செயல், இரு தரப்பினர் கிடையாது. பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஹோட்டல் செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு 105 ரூபாயில் நல்லஉணவு வழங்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த விளம்பர போர்டுக்கு கீழே மதுபான விற்பனை கூடம் குறித்த விளம்பரம் இடம் பெற்றுள்ளது. இது ஆன்மீகவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.