India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசியில் புதிய மாவட்ட பா.ஜ.க தலைவர் அறிமுக விழா இன்று (பிப்.3) நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், “மாநில தலைமை அறிவுறுத்தினால் தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன்” என்றார். இவர் ஏற்கனவே தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிட்டதாகும்.*உங்கள் கருத்து என்ன மக்களே?
பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இதற்காக அப்பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு, தென்காசியில் இருந்து நெல்லை செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று (பிப்.3) முதல் நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆரியங்காவூர் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பிக்கத்தக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்காசி ஆதாா் அல்லது ப்ளு ஆதாா் என்ற பெயரில் ஆதாா் அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதை 5-ஆவது வயதிலும், 15ஆவது வயதிலுமாக இரு முறை புதுப்பிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
சேர்ந்தமரம் அருகே உள்ள தன்னூத்தில் பிரசித்தி பெற்ற அதிசய மின்னல் மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு நவநாள் திருப்பலி பிப் 2ம் தேதி நடந்தது. விழாவில் சின்னரோமாபுரி சேர்ந்தமரம் பங்கு தந்தை ஜெகன் ராஜா தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றினார். நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த அன்னையின் திருப்பயணிகள் கலந்து கொண்டு தேவாலய சிறப்புகள் குறித்து கேட்டறிந்தனர்
இன்று (02.02.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி தமுமுக மற்றும் மமக நகர தலைமையகத்தில் நேற்று பிப்ரவரி 1ம் தேதி வடகரை கிளை தமுமுக நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமுமுக & மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் நயினார் முகம்மது தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். அபாபில் மைதீன், ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் கௌதம் அருணாச்சலம் மயிலாடுதுறையில், பள்ளிகளுக்கு இடையில் மாநில அளவில் நடந்த குத்து சண்டை போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார். இந்த சாதனை மாணவரை, பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மாள் ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் பலர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சைலேஷ் என்ற காவலர் கைது செய்யப்பட்டார். குற்றம்சட்டப்பட்ட மற்றொரு காவலரான செந்தில் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் ஓசூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் ஓசூர் சென்று காவலர் செந்திலை கைது செய்தனர் அவர் மீது போக்சோ வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
தென்காசி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தென்காசி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்களை தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, ஆலங்குளம் ஆகிய நான்கு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் சார்பில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பெற்றோர் இருவரையும் இழந்த 15 குழந்தைகளுக்கும், ஊனமுற்ற 02 குழந்தைகளுக்கும், ஊனமுற்ற பெற்றோர்களின் 02 குழந்தைகளுக்கும், சிறைவாசிகளின் 02 குழந்தைகளுக்கும், பெற்றோரால் கைவிடப்பட்ட 06 குழந்தைகள் ஆகியோர்களுக்கு தலா ரூ.10,000/-த்தை கலெக்டர் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.