Tenkasi

News November 26, 2024

கனிமவள லாரிகளுக்கு ரூ.1.94 லட்சம் அபராதம்

image

செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு 700 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. கனரக வாகனங்களில் கூடுதலாக உள்ள சக்கரங்களை சாலைகளில் இயக்காமல் அதிக அளவு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு இன்று தென்காசி ஆர்டிஓ கண்ணன், ஆய்வாளர் மணிபாரதி, போக்குவரத்துகாவல் ஆய்வாளர் மணி ஆகியோர் சோதனை நடத்தி அதில் 4 வாகனங்களுக்கு ரூ1.94 லட்சம் அபராதம் விதித்தனர்.

News November 26, 2024

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

image

தென்காசி மாவட்டம், ஆயக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபலமான ஆய்க்குடி அமர்சேவாசங்கத்திற்கு மர்ம நபர் ஒருவர் இமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது வெடிபொருள் நிபுணர்கள் ஆய்க்குடி அமர்வார் சங்கத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு 680 மாணவ மாணவிகள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. 

News November 26, 2024

துணை CM பிறந்தநாள்: பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சங்கரன்கோவில் அம்மா உணவகத்தில் நாளை(நவ.,27) இலவச உணவு, அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பால், பிரட் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு, அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் எம்எல்ஏ ராஜா கலந்து கொள்ளவுள்ள நிலையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 26, 2024

ஆலங்குளம்: கனிம வள லாரிகள் மீது கல்வீசிய 2 பேர் கைது

image

ஆலங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றிக்கொண்டு ராம் நகர் வழியாக சென்ற 2 லாரிகள் மீது கல் வீசிய வழக்கில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லக்கூடாது எனக்கூறி அழகாபுரி பாபநாசபுரத்தை சேர்ந்த சுகிர்த செல்வம், பிரவின் ஆகியோர் லாரியை தாக்கியது தெரிய வந்தது. நேற்று(நவ.,25) இருவரையும் கைது செய்தனர்.

News November 26, 2024

தென்காசி மாவட்டத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று(நவ.,26) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

News November 26, 2024

தென்காசி இரவு காவல் ரோந்து பணி விபரம் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2024

நோய் பரவலை தடுக்க முக கவசம் அணிய -ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதனால் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காய்ச்சல் சளி இருப்பவர்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை பெறவும் முக கவசம் அணியவும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிவுறுத்தினார் .

News November 25, 2024

கடைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும்

image

தென்காசி மாவட்ட குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“மத்திய அரசு ஏற்கனவே ஜிஎஸ்டி என்கிற பெயரில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வாடகை செலுத்தி கடை நடத்துவோர் கடை வாடகைக்கு மாதந்தோறும் 18% ஜிஎஸ்டி வழியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை திரும்ப பெற வேண்டும்” என வலியுறுத்தினார் .

News November 25, 2024

தென்காசியில் மலையேற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு

image

தென்காசி மாவட்டத்தில் Trektamilnadu திட்டத்தின் கீழ் குற்றாலம் செண்பகாதேவி அருவிக்கு மலையேற்றம் மேற்கொள்ள விரும்புவர்கள் <>https://www.trektamilnadu.com/<<>> என்ற இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி வாங்கி மலையேற்றம் செய்யலாம். கட்டண தொகையாக ஒரு நபருக்கு 699 ரூபாய் + 5% ஜிஎஸ்டி. தீர்த்த பாறையில் மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் இதே இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். கட்டணத் தொகை ஒரு நபருக்கு 799 ரூ.

News November 25, 2024

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

image

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய காலை நிலவரப்படி 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 68 அடி, 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 57.50 அடி 72 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 47 அடி, குண்டார் அணை நீர்மட்டம் 36 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 53.25 அடியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!